பிழை தவிர்க்கச் சில செய்திகள்:
1.
சொல்லின் இறுதியில் மெய்யெழுத்தாய் வரக்கூடியது
இடையின ரகரமே; வல்லின றகரம் அன்று.
எடுத்துக்காட்டு: அவர், ஊர், குதிர், பதர்
2. சொல்லின் இடையில் இரண்டு புள்ளி(மெய்) எழுத்து சேர்ந்து வருமிடங்களில், முதல் புள்ளியெழுத்தாக இருக்கக்கூடியது இடையின
ரகர மெய்யாகவே இருக்கும். வல்லின றகர மெய்யாக
இருக்காது.
எ-டு: நேர்த்தி, பார்த்து, அயர்ச்சி
‘ற்’ – மெய்யெழுத்தை அடுத்து இன்னொரு புள்ளி எழுத்து வராது.
பிழை --- திருத்தம்
முயற்ச்சி முயற்சி
நேற்த்தி நேர்த்தி
பயிற்ச்சி பயிற்சி
3.
இரட்டிக்கும் இடங்களில் வல்லின றகரமே வரும். இடையின
ரகரம் இரட்டிக்காது.
எ-டு: வெற்றி, கற்றோர், அற்ற, ஆற்றை
4.
‘ல்’, ‘ன்’ – என்ற புள்ளி எழுத்துக்கள் சேர்ந்து(புணர்ந்து) வருங்கால்,
திரிபில் வருவது வல்லின றகரமே.
எ-டு: கல்+பலகை =
கற்பலகை
கல்+தாழை =
கற்றாழை
வருதல்+கு =
வருதற்கு
தன்+பெருமை = தற்பகருமை
பொன்+தோடு = பொற்றோடு
அதன்+கு = அதற்கு
சில இன எழுத்துக்களின் பெயர்கள்
ண
- டண்ணகரம், முச்சுழிணகரம்.
ந - தந்நகரம், மொழிமுதல் நகரம்.
ன - றன்னகரம், இருசுழி னகரம்.
ந - தந்நகரம், மொழிமுதல் நகரம்.
ன - றன்னகரம், இருசுழி னகரம்.
ர - இடையின ரகரம், சின்ன ரகரம்
ற - வல்லின றகரம், பெரிய றகரம்.
ழ - சிறப்பு ழகரம், பெரிய ழகரம்,மகர ழகரம்.
ள - பொது ளகரம், சின்ன ளகரம்.
(பாவாணருக்கு நன்றி!)
-------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக