திங்கள், 24 மார்ச், 2008

எத்தனென்று இருப்பாயோ?


அறுசீர் மண்டிலம் 

(குறிலீற்று மா - கூவிளம் - விளம் - விளம் - விளம் - காய்)

***********************************************************************************************

சோழ னென்றுனைச் சொல்லினர் ஐயகோ!
          சொத்தையென் றிருந்தாயே!
வேழ மென்றனர்; வீரனென் றார்த்தனர்
          வெளிறனென் றிருந்தாயே!
காழ முற்றசெவ் வுணர்வின னென்றனர்
          கரவனென் றிருந்தாயே!
ஈழ வீழ்வினை எண்ணவும் பொறையிலேம்!
          எத்தனென் றிருப்பாயோ?