வியாழன், 3 ஏப்ரல், 2008

தமிழர் என்று அழைப்பதா?


அறுசீர் மண்டிலம் 

(விளம் மா தேமா) 

ஓதலில் தமிழிங் கில்லை!
          உரைசெயல் தமிழில் இல்லை!
காதலில் அரங்கம் சென்றால்
          கனித்தமிழ் இசையும் இல்லை!
நோதலில் வழிப டற்கே
          நுழையினுந் தமிழே இல்லை!
ஆதலின் தமிழர் என்றே
          அழைப்பதும் சரியே இல்லை!

'பின்னே வரைபேர்' என்னென்றார்!


வஞ்சி (விருத்தம்) மண்டிலம் 

(மா - மா - தேமாங்காய்) 

முன்னே, நீங்கள் யார்?என்றார்;
சொன்னேன் பெயரை; 'இல்லை,உம்
பின்னே வரைபேர்' என்னென்றார்!
என்னே இழிவே! தூ!சாதி!