திங்கள், 28 ஜூன், 2010

குமுறலில் எழுந்த பா மூன்று!

*
1. பஃறொடை வெண்பா

எத்தனென நன்னடிப்பால் இன்னினத்தைக் கொன்றொழிக்க
மொத்தமுமாய் உன்துணையை முன்னளித்தாய் ஒத்தாரே
இல்லா இழிஞா! இரண்டகனே!   – புல்லுருவே!
பொல்லாப் பழிமாற்ற பொய்ம்முகத்தில் செம்மொழிக்கே
மாநாடென் றேய்ப்பதுமேன்? மாசு.


2. நேரிசை வெண்பா

அரிய திறத்தோடே ஆற்றல் முனைப்பில்


எரியும் உணர்வோ டெழுந்தார்! – உரியமண்மீட்க முயன்றாரை மீளா அடக்குமுறைக்கோட்டிய தன்னலத்தை ஓர்.3. நேரிசை வெண்பா

செம்மொழிமா நாடாம்! சிறப்பாம்! நடத்தினவர்

நம்பக் கழுத்தறுக்கும் நன்னடிகர்! – விம்மலுறும்

ஈழத் தமிழன் இழிவழிவுக் காளாகக்

கீழ ரிவர்துணையர், கேள்.
*
*