புதன், 3 மே, 2017

எண்ணுப்பெயர்கள் – உ (தொடர்)எண்ணுப்பெயர்கள் (தொடர்)

நான்கு:
நால் என்பது மாற்று வடிவம்.
மாடு நான்கு (பெயர் வடிவம்)

நான்கு + ஆயிரம் = நாலாயிரம். (உயிர்முன்)
நான்கு + வகை = நால்வகை
- உயிரும் இடையினமும் வர ஈறு கெட்டு னகரம் லகரமாயிற்று.

நான்கு + கலைகள் = நாற்கலைகள் (மெய்முன்)
நான்கு + பால் = நாற்பால்
- வல்லினம் வர ஈறு கெட்டு னகரம் றகரமாயிற்று.

நான்கு + மணி = நான்மணி
நான்கு + நாழி = நானாழி
- மெல்லினம் வர ஈறு கெட்டு னகரம் திரியாது நின்றது.

நாலு குதிரை
நாலுநாள்
நாலுவழி
- மூவின மெய்களும் வருமிடத்து, ஈறுகெட்டு னகரம் லகரமாய் உகரம் பெற்று வருதலுங காண்க.

ஐந்து:
ஐந்து பெயர் வடிவம்.
ஐ மாற்று வடிவம்.

ஐ உழக்கு (உயிர் முன்)
ஐ வட்டி (இடையினம் முன்)
ஐந்து + பத்து = ஐம்பது

ஐந்து + மூன்று = ஐம்மூன்று
- நகரம வருமெய்யாகத் திரிந்தது.

ஐந்து + பால் = ஐம்பால்
- வருமெழுத்துக்கு இனமாயிற்று.

ஐந்து + ஆயிரம் = ஐயாயிரம்
ஐந்து + வகை = ஐவகை
- நகரமெய் கெட்டது.

ஐந்து + நூறு = ஐந்நூறு
ஐந்து + தொழில் = ஐந்தொழில்
- நகரமெய் இயல்பாய் நின்றது.

ஒரோவிடத்து,
ஐந்து + வண்ணம் = ஐவ்வண்ணம் என வரும்.

ஆறு:
ஆறு பெயர் வடிவம்.

ஆறு + ஆழாக்கு = ஆறாழாக்கு (உயிர் முன்)
ஆறு + நூறு = அறுநூறு (மெய்முன்)

ஆறு + பத்து = அறுபது
ஆறு + சாண் = அறுசாண்
ஆறு + நாழி = அறுநாழி
ஆறு + வகை = அறுவகை
- முதல் நெடில் குறுகிற்று.
                                               
ஏழு:
ஏழு பெயர் வடிவம்.
ஏழ் மாற்று வடிவம்.

ஏழு + ஆயிரம் = ஏழாயிரம் (உயிர்முன்)
ஏழு + கலம் = எழுகலம் (மெய்முன்)

ஏழு + பத்து = எழுபது
ஏழு + வகை = எழுவகை
ஏழு + நாழி = எழுநாழி
- முதல் குறுகியது.

ஏழு + கடல் = ஏழ்கடல்
- ஏழன் ஈற்றுயிர் கெட்டது.
ஏழு கடல் எனவும் பொது விதியால் முடியும்.
                                           (தொடரும்)