திங்கள், 26 அக்டோபர், 2015

தமிழர் நிலை!


    தமிழர் நிலை!
மூத்த தமிழே முதற்றாய் மொழியாம்
           
முடிவைச் சொல்கின்றார்!
ஏத்தும் ஆய்வர் இந்நா கரிகம்
           
எவர்க்கும் முதலென்றார்!
காத்தல் பேணல் கருதாத் தமிழர்
           
கடைகெட் டழிகின்றார்!
ஊத்தை உணர்வால் உறுதன் னலத்தால்
           
உலகில் இழிகின்றார்!

2 கருத்துகள்:

உமா சொன்னது…

வணக்கம் ஐயா!
அருமையான, உண்மையான உணர்வுடைப் பா

தமிழநம்பி சொன்னது…

நன்றி உமா. நீண்ட இடைவெளிக்குப் பின் உங்கள் கருத்துரை கண்டு மகிழ்ந்தேன். நலமாக இருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.