காடு!
தாய்மொழியில் பேசினால் தண்டனை பள்ளியிலே!
தாய்தந்தை பேரும் தமிழில்லை! –
போய்வணங்கச்
சொற்றமிழ்க் கில்லையிடம்! சொல்லுகநா டில்லையிது
கற்றைக்கு முட்டைக்குங் காடு.
அழகார் தமிழில் அயன்மொழிச் சொற்கள்
புழங்கக் கலந்தெழுதல் புன்மை! – வழக்கமென
நற்றமிழ்க்(கு) ஊறுறுத்த நாடி எழுதுலகு
கற்றைக்கு முட்டைக்குங் காடு.
(கல் தைக்கும் முள் தைக்கும் காடு > கற்றைக்கு
முட்டைக்குங் காடு)
புதுவை ‘தெளிதமிழ்’ இதழில்
வெளிவந்தவை.
2 கருத்துகள்:
வணக்கம்
அற்புத வரிகள்படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ஐயா!
கருத்துரையிடுக