சனி, 21 மார்ச், 2009

வேண்டுகோள்!


வேண்டுகோள்!

[congress.jpg] 

'காங்கிரசு'க் கட்சி என்று அழைக்கப் படுகின்ற -
இந்தியத் தேசியப் பேராயக் கட்சி
(Indian national congress party) -

*
கொடிய இனவெறியரான சிங்களரின் ஈழத் தமிழின அழிப்பு வினைக்கு முழுத் துணையாகவும் முதன்மைக் கலந்துரைஞராகவும் உள்ளது.

*
குழந்தைகள், சிறுவர்கள் உள்பட பல்லாயிரக் கணக்கான ஏதுமறியாத் தமிழர் கொல்லப்படவும் காயமுறவும் உடலுறுப்புகளை இழந்து சொல்லொணாக் கொடுமைகளுக்கு ஆளாகவும் முதன்மைப் பொறுப்பாளராக உள்ளது.

*
நானூறுக்கும் அதிகமான தமிழ்நாட்டு மீனவர்களைச் சிங்கள இனவெறிக் கடற் படையினர் கொன்றுள்ளனர்; தமிழக மீனவரின் படகுகளையும் வலைகளையும் நாசப் படுத்தி யுள்ளனர். அவர்களின் மீன்களையும் பிறவற்றையும் கொள்ளையடித் துள்ளனர். இதுவரை ஒருமுறை கூடப் பேராயக் கட்சியின் தலைமையிலான இந்திய அரசு, சிங்கள அரசுக்குச் சிறு கண்டனம் தெரிவிக்க வில்லை.

*
தமிழகமே கொதித் தெழுந்து ஈழத் தமிழரையும் தமிழக மீனவரையும் காப்பாற்றக் கோரிப் பல்வேறு வகையிலும் போராட்டங்கள் நடத்தியும், தமிழர்கள் 11 பேர் இதற்காகத் தங்கள் உடலைத் தீக்கிரையாக்கிக் கொண்டு உயிர் ஈகம் செய்தும், தமிழ்நாட்டுச் சட்டமன்றமே ஒருங்கிணைந் தெழுந்து ஈழப்போரைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் இந்திய அரசும் 'காங்கிரசு'க் கட்சியும் கொஞ்சம் கூடப் பொருட் படுத்தவில்லை.

*
எனவே, 'காங்கிரசு'க்கு யாரும் ஒப்போலை (வாக்கு) அளிக்காதீர்கள்!
மாந்தநேயம் அறவே இல்லாதவர்கள் பதவியில் அமர வாய்ப்பு அளிக்காதீர்கள்!

'
காங்கிரசை'த் தோற்றோடச் செய்யங்கள்!

 

6 கருத்துகள்:

ஆ.ஞானசேகரன் சொன்னது…

வேர யாருக்கு ஓட்டழிப்பது? ஞானி சொல்வது போல் 49ஓ க்கு வாக்கழிக்க வாய்ப்புள்ளதா?

குப்பன்.யாஹூ சொன்னது…

also add pictures of partys who are allaicne with congress, especially Dalith panthers (Thiruma ) party.

கலகலப்ரியா சொன்னது…

இது ஈழத்திற்கு நீங்க செய்யும் பெரிய தொண்டு..:-)

தமிழநம்பி சொன்னது…

ஆ.ஞானசேகரன் அவர்களுக்கு…
ஐயா,
'காங்கிரசு'க்கு யாரும் ஒப்போலை (வாக்கு) அளிக்காதீர்கள்! - என்றே என் வேண்டுகோள் வழி வலியுறுத்துகின்றேன்.

உங்கள் தொகுதியில் நிற்கும் 'காங்கிரசு' வேட்பாளரைத் தவிர, மற்றைய வேட்பாளர்களில் நீங்கள் 'தாழ்வில்லை' என்று கருதும் எவருக்கும் வாக்களிக்கலாம் என்பதே என் நிலை.

படித்துக் கருத்துரைத்தமைக்கு நன்றி ஐயா!

தமிழநம்பி சொன்னது…

குப்பன்_யாஹூ அவர்களுக்கு…

ஐயா,
'காங்கிரசு'க்கு யாரும் ஒப்போலை (வாக்கு) அளிக்காதீர்கள்! - என்றே என் வேண்டுகோள் வழி வலியுறுத்துகின்றேன்.

உங்கள் தொகுதியில் நிற்கும் 'காங்கிரசு' வேட்பாளரைத் தவிர, மற்றைய வேட்பாளர்களில் நீங்கள் 'தாழ்வில்லை' என்று கருதும் எவருக்கும் வாக்களிக்கலாம் என்பதே என் நிலை.

படித்துக் கருத்துரைத்தமைக்கு நன்றி ஐயா!

தமிழநம்பி சொன்னது…

கலகலப்ரியா அவர்களுக்கு…

தொண்டா?
ஆற்றாமையில் வேறொன்றும் செய்ய இயலா நிலையில் இவ் வேண்டுகோள் விடுத்துள்ளேன்

கருத்துரைத்தமைக்கு நன்றி!