செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

இன்முகத்தோடு உள்ளனராம்!

   இன்முகத்தோடு உள்ளனராம்!

இனக்கொலையர் வெங்கொடுமை எல்லை மீற
      இனியுமிதைப் பொறுப்பதுவோ என்றெ ழுந்த
மனக்கனலர் திரண்டறிவு ஆற்றல் வீரம்
      மாசற்ற ஈகத்தால் மண்ணை மீட்டே 
இனக்கொடியை ஈழத்தில் ஏற்றி ஆண்டார்!
      எல்லாரும் நல்லாட்சி இதுவென் றாரே!
தனக்கெனவே வாழ்ந்திடுவார் தில்லி யோடு
      தன்மானம் கெட்டுஓர்ஒப் பந்தம் போட்டார்!


சிங்களனை ஆளாக்கித் தில்லி யங்கே
      செந்தமிழ இனந்தன்னைச் சிதைத்த ழிக்க
இங்குள்ள தமிழர்களின் எதிர்ப்பை மாற்ற
      ஏய்த்துநடித்(து) ஏமாற்றி எல்லாம் செய்தார்!
எங்குமிலாக் கொடுங்குண்டு வீசி அங்கே
      எண்ணற்ற தமிழர்களைக் கொன்றார் இங்குப்
பொங்குணர்வில் பதின்மூவர் பொசுங்கிச் செத்த
      போதுமதைப் பொருட்படுத்தாக் கொடுமை என்னே!


உயிரிருந்த மூன்றிலக்கம் பேரை அங்கே
      ஒருசேர முள்வேலி அடைப்புக் குள்ளே
செயிர்உருவர் சிறைவைத்துச் சிதைக்கின் றாரே
      சிந்தைமிக நொந்தவரும் சிறுகச் சாக!
அயிறற்கு உணவில்லை அருந்த நீரும்
      அழற்காயம் நோய்கட்கு` மருந்து மில்லை!
எயிலிருக்கும் கோட்டையிருந்(து) இரண்ட கத்தில்
      இவருரைத்தார் இன்முகத்தோ(டு) இருப்ப தாக!


அடைத்துவைத்த கூடாரம் மிதந்த தங்கே
      அடைமழையின் வெள்ளத்தில் அவர்ந னைந்தே
முடைநாற்ற நீரினிலே நின்ற வாறே
      முன்னறியாத் துனபத்தில் மூழ்கிப் போனார்!
கடைகெட்ட தொலைக்காட்சி காட்டு மிங்கே
      களிப்போடு பேசியமர்ந் திருப்ப தாக!
விடைசொல்லும் நாளொன்று வந்தே தீரும்!
      விழிப்புவரும்! விடிவுவரும்! வீழ்வார் வஞ்சர்! 
 ----------------------------------------------------------------------------------------------------------
     
  

1 கருத்து:

Unknown சொன்னது…

வணக்கம் எம் இன உறவுகளே நாங்கள் ஆரம்பித்துள்ள www.tamilseithekal.blogspot.com பிளாகுக்கு உங்கள் அனைவரது ஆதரவு தேவை.நீங்கள் ஈழம் பற்றி எழுதுபவராக இருந்தால் உங்கள் பதிவில் வெளியிடும் ஈழம் பற்றிய கவிதைகள், செய்திகள் மற்றும் கட்டுரைகளை எங்களுக்கும் அனுப்பி வைக்கவும்...நீங்கள் எழுதும் பதிவுகள் தான் நாம் இந்த துறைக்கு வர காரணமாய் அமைந்தது..ஆதனால் எம் இந்த வேண்டுகோளை ஏற்றுகொள்வீர்கள் என நாம் நம்புகின்றோம்.நான் பல ஈழ பதிவாளர்களின் பதிவுகளை வாசித்துள் லேன்..பலருடைய பதிவுகள் மிக நன்றாக உள்ளன எனவே உங்கள் பதிவுகளை எம் வாசகர்களும் தெரியபடுத்தும் முகமாக இது அமையும் என நாம் நம்புகின்றோம். செய்திகளை உங்கள் மின்அஞ்சல் மூலம் எங்களுக்கு கீழ் உள்ள மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.நீங்கள் அனுப்பும் செய்தி அல்லது கட்டுரைக்கு தொடர்பான படத்தையும் இணைத்து அனுப்பி வைக்கவும்.நீங்கள் அனுப்பும் செய்தி அல்லது கட்டுரையின் கீழ் உங்களின் புனை பெயர் அல்லது உங்களின் பதிவுதளத்தின் பெயர் குறிப்பிடவும் நாங்கள் உங்களின் பதிவை வெளியிடும் போது இவையுடன் சேர்த்து வெளியிடுவோம். அனுப்பவேண்டிய முகவரி :usertamil.fortamilseithekal@blogger.com இதன் மூலம் உங்கள் பதிவுகளை மற்றவர்களும் தெரிந்து கொள்ள உதவும். இது அனைத்து ஈழ பதிவர்களை ஒன்று இணைக்கும் ஒரு முயற்சி..எம் இந்த வேண்டுகோளை ஏற்று கொண்டு எமக்கு உதவும்படி தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்... இதுவரை இணைந்தவர்களுக்கு எமது நன்றிகள்
செல்வராணி சுதன் ஈழமாறன் குட்டி புலி நிமலா ராஜன் செல்வராணி சமரசிங்க ஒன்று பட்டால் உண்டு வாழ்வு! அன்புடன் தமிழ்செய்திகள் team