செவ்வாய், 26 ஜனவரி, 2010

இழிவொடு யாமுறைகின்றோம்!

*                    (எழுசீர் மண்டிலம்) * 

மக்களின் நெஞ்சில் நிலைத்தனை நீயே!
          மாநிலம் பாடுமுன் புகழே! 
குக்கலை இங்கே ஆட்சியில் அமர்த்திக் 
          குறுகினம் இரண்டகம் கண்டே! 
அக்கரைப் பேயித் தாலியை விட்டே 
          அழிவினைக் கிங்குவந் ததுவே! 
இக்கண முயிரோ டுள்ளையோ யிலையோ 
          இழிவொடு யாமுறை கின்றோம்! 

--------------------------------------------------------------------------
\

1 கருத்து:

Kandumany Veluppillai Rudra சொன்னது…

காலமும் நேரமும் கை கூடிவந்தால்,காரியம் நிறைவேறி விடும்.
காலத்தையும் நேரத்தையும்,கைகூட வைப்பது தமிழர்களின் முயற்சியில் இருக்கிறது.