புதன், 13 ஜனவரி, 2010

ஈராயிர மாண்டில் வாராது வந்தவனே!

(எழுசீர் ம(எழுசீர் மண்டிலம்) 

செந்தமி ழினமீ ராயிர மாண்டில்  
    செறிந்தெழ வந்தவெந் தலைவா!
இந்தநாள் ஈடில் மறவநீ உளதும்  
    இலாததும் அறிந்திட ஒல்லேம்!
உந்திடு முணர்வில் ஒடுக்கலை எதிர்ப்போம்; - 
    உறுபகை இரண்டகம் சாய்ப்போம்!
சொந்தமே! உயிரில் தோய்ந்தநல் லுறவே!  
    சூளென உரைத்தனம் ஐயா! 

---------------------------------------------------------------------------------

4 கருத்துகள்:

அகரம் அமுதா சொன்னது…

நெஞ்சைப் பிழியும் பா! வாழ்க அய்யா!

அண்ணாமலை..!! சொன்னது…

உயிரை உருக்கி உரமாக்கிய பாடலன்றோ..!!
ஐயா..!!! நீவிர் வாழ்க..!!

தமிழநம்பி சொன்னது…

நன்றி அன்பர்களே.

Kandumany Veluppillai Rudra சொன்னது…

நெஞ்சைப்பிளந்து ,தமிழன் உணர்வை பெருக்கும்.-தமிழ்
பஞ்சமில்லா இன்பத் தமிழ்ப் பாடல் செதுக்கியதை
வாஞ்சை மிகக்கொண்டு வாழ்த்துகிறேன் ஐயா-இன்னும்
வாககாப் பாடி வளருங்கள் செந் தமிழை