ஈர்க்கும் தமிழ்பேசி ஏய்த்தெத்தி வாழ்ந்திடுவார்             
பார்க்குள் பதராவார் பார். 
பணங்காசின் பித்ததைப் பார்த்தறிந்த பின்னே 
இணங்கியுளம் ஏற்றல் இலை. 
மூவாற்று நீரும் முழுதும் இழப்பதோ 
போவாய் உனக்கேன் பொறுப்பு. 
மதவுணர்வு மக்களை மாய்க்கவோ? முற்றும் 
மதமதுவும் வேண்டா மறு. 
வீழார்; விடுதலைப்போர் வெல்வாரெஞ் செந்தமிழர் 
ஈழத் திதுவுறுதி யே!. 
 
2 கருத்துகள்:
/////வீழார்; விடுதலைப்போர் வெல்வாரெஞ் செந்தமிழர்
ஈழத் திதுவுறுதி யே./////
எத்துணை ஒப்பற்ற வரிகள். ஈழத்தில் ஓர்நாள் நிச்சயம் வெற்றிபெறுவான் தமிழன். தங்களின் இக்கவிதை என்னை வெகுவாய் ஈர்த்தது. வாழ்த்துக்கள்.
நெஞ்சார்ந்த நன்றி!
- த.ந.
கருத்துரையிடுக