புதன், 2 டிசம்பர், 2015

அனைவர்க்குமான ஓர் அன்பு வேண்டுகோள்!

அனைவர்க்குமான ஓர் அன்பு வேண்டுகோள்!   

     தமழ்நாட்டில் குறிப்பாகத் தலைநகர் சென்னையில் இக்கால் இயல்பிகந்த நிலையில் மக்கள் பெருந்துன்பத்திற் காளாகியுள்ளனர். இந்நிலைக்குக் காரணமானவர்கள் யார் யார்? எவரெவருக்கு எவ்வளவு பங்கு? என்ற ஆய்வுகளும் கருத்தாடல்களும் இப்பொழுது, இந்த நேரத்தில் எண்ணவோ பேசவோ கூடாதவை மட்டுமல்ல, இந்த நேர மீட்சிப் பணிக்குக் கேடு விளைவிப்பவை; நேரத்தை வீண்டிப்பவை.
    
     இக்கால் உடனடித் தேவை மக்கள் உயிர்களைக் காப்பாற்றுவதும் அவர்களுக்கு உணவும் உறைவிடமும் தந்து ஆறுதல் அளிப்பதுமே ஆகும். இந்த நோக்கத்திலேயே அனைவரின் கவனமும் இருக்க வேண்டும். இவையே இக்கால் இன்றியமையாது தேவைப்படுவனவாம்..
    
     இவற்றையே கருத்தில் கொண்டு எவ்வகை வேற்றுமையும் கருதாது ஒவ்வொருவரும் இயங்க வேண்டுமெனப் பணிவுடன் வேண்டுகிறேன். எவ்வெவ் வகையில் உதவ முடியுமோ அவ்வவ் வகையில் அவரவரும் இடர்ப்பாட்டி லுள்ளோருக்கு உதவுதல் இந்த நேரத் தேவையாக உள்ளது.
    
     மீட்புப் பணியிலுள்ளோரைப் பாராட்டுவோம்; மக்களுக்கு உதவுவோர்க்கு நன்றி சொல்வோம். பிறவனைத்தும் பிறகு பேசலாம்!
     செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
     செய்யாமை யானும் கெடும்.

-----------------------------------------------------------------------  

3 கருத்துகள்:

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

ஆய்வுகளும் கருத்தாடல்களும் இப்பொழுது, இந்த நேரத்தில் எண்ணவோ பேசவோ கூடாதவை மட்டுமல்ல, இந்த நேர மீட்சிப் பணிக்குக் கேடு விளைவிப்பவை; நேரத்தை வீண்டிப்பவை. // மிகச்சரி, இடரில் இருப்போருக்கு , இந்த ஆய்வுகள் உதவா! உணர்ந்து செயற்படுவோம்.

அ. பசுபதி (தேவமைந்தன்) சொன்னது…

பகிர்ந்துள்ளேன் கூகுள் கூட்டலில்.

உமா சொன்னது…

உண்மை. இப்போதைய தேவை உதவி.நல்ல உள்ளங்களை பாராட்டி ஊக்கமளித்தல். உற்சாகமூட்டுதல். எதிர்மறை பேச்சுக்கள் பயனளிக்கப் போவதில்லை.