திங்கள், 28 ஜூன், 2010

குமுறலில் எழுந்த பா மூன்று!

*
1. பஃறொடை வெண்பா

எத்தனென நன்னடிப்பால் இன்னினத்தைக் கொன்றொழிக்க
மொத்தமுமாய் உன்துணையை முன்னளித்தாய் ஒத்தாரே
இல்லா இழிஞா! இரண்டகனே!   – புல்லுருவே!
பொல்லாப் பழிமாற்ற பொய்ம்முகத்தில் செம்மொழிக்கே
மாநாடென் றேய்ப்பதுமேன்? மாசு.


2. நேரிசை வெண்பா

அரிய திறத்தோடே ஆற்றல் முனைப்பில்


எரியும் உணர்வோ டெழுந்தார்! – உரியமண்மீட்க முயன்றாரை மீளா அடக்குமுறைக்கோட்டிய தன்னலத்தை ஓர்.3. நேரிசை வெண்பா

செம்மொழிமா நாடாம்! சிறப்பாம்! நடத்தினவர்

நம்பக் கழுத்தறுக்கும் நன்னடிகர்! – விம்மலுறும்

ஈழத் தமிழன் இழிவழிவுக் காளாகக்

கீழ ரிவர்துணையர், கேள்.
*
*

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

-உ-/~=திருமறைமலை-=ஓம்=-யடிகள் துணை=~/=>
#”செம்மொழிமா நாடே..? சீரார் அறிவொல்கச்
--செம்”பழி”மா நாடாய்!ச்:செங்குருதி சீய்த்தொழுகுங்
--கையுணர்த்திக் காயவைத்- -தாட்டிக் கரிபூசிப்
--பொய்ம்மாயப் %போகப் புழுத்தறிவு கோத்து,வாய்
--கைத்துலரப் புன்சொற் பயிர்ந்தாற்றி மாய்க்குங்
--கலைவல் ^கொலைஞனிவன் கன்னித் தமிழர்க்_
--_குலைவைக்குங் ‘கூத்து’வனே, கொள்”.
~”சேரர் கொற்ற”த்தோம்,_*நாவலந் தமிழகக் **கொங்குதேய-நின்று.|=சிவ**சிவ=|

munril சொன்னது…

செத்து கிடக்கிறது தமிழினம் - அதில்
சதுரங்கம் நடத்துது சிங்களம் - அந்த
சதுரத்தில் நின்று கொண்டு - பாருங்கோ
செம்மொழி ஆயப் போகினமாம் செம்மறிகள்..