* உன்றன் களங்கம் தீராதே! 
    
நாளுக் கொன்று கதைக்கின்றாய்;
    நடிப்பில் ஏய்க்க
முனைகின்றாய்!
ஆளும் வாய்ப்புன் குடும்பத்தார்
    ஆக்க வளத்திற்
கெனக்கொண்டாய்!
மூளும் சினம்நீ புலிகள்மேல்
    மொத்தப் பழியும்
சுமத்துகையில்!
நீளும் ஆட்சி இரணிலுக்கு
    நிலைக்கா ததினால்
ஊறென்றாய்!
இணையில் மறவன் ஈழத்தின்
    எழுச்சி பிரபா
கரன்வீழ்ச்சி
உணக்க உன்றன் விழிநீரும்
    உகுக்கும்
என்றாய் உண்மையிலாய்!
வணங்கா மண்ணின் மைந்தரொடு
    வக்கில் லோராய்
இங்குள்ள
பிணக்கத் தமிழர் இனிமேலுன்
    பேச்சை நம்பார்
இரண்டகனே!
வாசெ குவுடன் பொற்கோவும்
    வக்குஇல் சுபவீ
வீரமணி
பேசி ஏய்க்கும் இனும்பலரும்
    பின்னே உள்ளார்
என்றெண்ணிக்
கூசா நடிப்பில் கொள்கையரை
    குழப்ப முனைவாய்
வீணுன்றன்
மோசச் செயல்கள் வெல்லாதே!
    முழுத்தன் னலனே!
மொய்ம்பற்றோய்! 
நன்றாய்  முனைந்து
 நடிக்கின்றாய்;
    நாளும் கதைகள்
சொல்கின்றாய்!
உன்றன் குடும்ப நலனுக்காய்
    ஒழித்தாய் ஈழத்
தமிழர்களை!
இன்றுன் கதைகள் நம்பற்கே
    எவரிங் குள்ளார்
மெய்த்தமிழர்!
ஒன்றிங் குறுதி உணர்ந்திடுவாய்;
    உன்றன் களங்கம்
தீராதே! 
------------------------------------------------------------------------
 
 
3 கருத்துகள்:
அருமை
நன்றி.
ஐயா இன்றைய நிலைப்பாட்டில் இந்தக் கவிதை வரிகள் பல சாத்தார சிங்களவர் ஒருவர் கூறும் கூற்றாய் அமைந்திருக்கின்றதே!
ந.குணபாலன்
கருத்துரையிடுக