திங்கள், 25 மே, 2009

இரண்டகர் இரண்டுபேர்!
ஓரிலக்கம் பேர்கொன்றான் ஈழ மண்ணில்!
    உடனிக்கால் மூன்றிலக்கம் மெல்லக் கொன்றே 
ஓரினத்தை உருத்தெரியா தழிக்கின் றானே 
    உரிமைநிலத் தடயமெலாம் ஒக்க நீக்கி!
பூரியனின் கொடுமைகட்குத் துணையாய் நிற்போர்
    பொய்ம்முகத்தி னித்தாலிப் பொல்லாப் பேயும் 
சீரியநல் லார்காறித் தூ !தூ ! வென்றே 
    சினந்துமிழும் தன்னலப்பேய்க் கலைஞன் தானும்!

            ----------------------------

2 கருத்துகள்:

Ramasamy, K. சொன்னது…

சீரியநல் லார்காறித் தூ !தூ ! வென்றே
சினந்துமிழும் இழிபிறப்புக் கலைஞன் தானும் !

என்றல்லவா முதலில் இருந்தது. அதுவே பொருத்தம் அன்றோ?

வாழ்க வளமுடன்!
க. இராமசாமி

தமிழநம்பி சொன்னது…

பொறுத்தாற்றுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

எக்காரணங் கொண்டும் இவர் செய்யும் இரண்டகத்திற்காகத் தொடர்பில்லாத இவரின் பெற்றோர்க்கு எவ்வகைப் பழியும் வரக் கூடாதென்பதற்காகவே திருத்தியுள்ளேன்!

தொடர்ந்து படித்து கருத்துரைத்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றி ஐயா.