(எழுசீர் ம(எழுசீர் மண்டிலம்)
செந்தமி ழினமீ ராயிர மாண்டில் –
செறிந்தெழ
வந்தவெந் தலைவா!
இந்தநாள் ஈடில் மறவநீ உளதும் –
இலாததும்
அறிந்திட ஒல்லேம்!
உந்திடு முணர்வில் ஒடுக்கலை எதிர்ப்போம்; -
உறுபகை
இரண்டகம் சாய்ப்போம்!
சொந்தமே! உயிரில் தோய்ந்தநல் லுறவே! –
சூளென
உரைத்தனம் ஐயா!
---------------------------------------------------------------------------------
4 கருத்துகள்:
நெஞ்சைப் பிழியும் பா! வாழ்க அய்யா!
உயிரை உருக்கி உரமாக்கிய பாடலன்றோ..!!
ஐயா..!!! நீவிர் வாழ்க..!!
நன்றி அன்பர்களே.
நெஞ்சைப்பிளந்து ,தமிழன் உணர்வை பெருக்கும்.-தமிழ்
பஞ்சமில்லா இன்பத் தமிழ்ப் பாடல் செதுக்கியதை
வாஞ்சை மிகக்கொண்டு வாழ்த்துகிறேன் ஐயா-இன்னும்
வாககாப் பாடி வளருங்கள் செந் தமிழை
கருத்துரையிடுக