வெள்ளி, 3 ஜூலை, 2009

வ.அய்.சுப்பிரமணியம் ஐயாவை இழந்தோமே!

..
..





தலைமைப்பண் பாற்றல்சால் தமிழறிஞர் ஆய்வர் !

. தன்னிகரில் வினையாண்மைத் தகையாளர் ! என்றும்

நிலைத்திருந்தே ஆய்வுசெயும் நிறுவனங்கள் தந்தார்

. நிறைவாகச் செந்தமிழில் நெடும்பணிகள் ஆற்ற !

தொலைநோக்கில் பல்கலையில் தூயதமிழ்க் கென்றே

. துறையொன்றைத் தொடக்கியவர் துய்யதமிழ் நெஞ்சர் !

இலையின்றே வ. அய்.சுப் பிரமணிய ஏந்தல்

. ஈடில்லாப் பெருந்தமிழர் இவரையிழந் தோமே !



0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக