.

ஏற்கெனவே எம்முள்ளம் எரியத் தீய்க்கும்
. ஈழத்துச் செய்தியின்பின் இந்தச் செய்தி !
தேற்றமுற விடையளிக்க யாரைத் தேர்வம் ?
. தீந்தமிழின் இலக்கணத்தில் ஐயம் தோன்றின் !
ஏற்றமுற விளக்குதற்கே எவரிங் குள்ளார்
. இசைத்தமிழின் நுணுக்கங்கள் எடுத்துச் சொல்லி !
ஆற்றலுறத் தமிழறிந்த ஐயா எங்கள்
. அருந்திருமு ருகனாரே ! அழுகின் றோமே !

0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக