முதுமுனைவர்
இரா.இளங்குமரனார் ஐயாவின் குரல் - கஉ.
============================================================
தமிழா,
இந்தி எதிர்ப்பு எதற்காக? தமிழைக் காக்கவா, ஆங்கிலத்தைக்
காக்கவா?
உன் மாநிலத்தின் இருமொழிக் கொள்கை,
மும்மொழிக் கொள்கை இந்தியத்தினும் மோசடிக் கொள்கை அல்லவா?
இது திராவிடக் கொள்கையா, தீரா விடக் கொள்கையா?
தமிழைக் காப்பதற்காகத் தம்மை எரியூட்டிக் கொண்டவர் எத்தனை
எத்தனை பேர்!
அவர்கள் புதைகுழியாம் அரியணைமேல் வீற்றிருந்து ஆட்சி செய்த
திராவிடங்கள் தமிழைக் காத்தனவா?
‘எங்கும்
தமிழ், எதிலும் தமிழ்’ என்பது
முழுக்க முழுக்க ஏமாற்றுத்தானே?
இருந்த அரசுப்பள்ளித் தமிழையும் இல்லாமல் செய்துவிட்டதை எண்ண மாட்டாயா?
முறைமன்றத்தில் உன் மொழியில் வாதிடப்படுகிறதா?
உன் சிக்கலைப் பற்றி வாதிடுவது உனக்குப் புரிகிறதா?
உன் நோயை மருத்துவனுக்கு மொழிபெயர்த்துச் சொல்லி மருந்து
தருவதற்கும்,
உன் மனைவியிடம் பேசுவதற்கு மொழிபெயர்ப்பாளி வைப்பதற்கும்,
இதற்கும் என்ன வேறுபாடு?
தமிழ் பயிற்றுமொழிக்குத் தடை , எவர் செய்தது?
ஆங்கிலக் கொள்ளையர்;
தடையாக்க வழிசெய்தவர் ஆள்பவர்.
தமிழில் பயிலச் சட்டமியற்றாமல் ஆணையிட்டார்!
சட்டம் செல்லும்; ஆணை தள்ளப்படும்.
உரிமம் கொடுக்கும் போதே, தமிழில் பயிற்றினால்தான் உரிமம்
என்றால்,
இந்நிலை ஏற்படுமா?
* * * * * * * * * * * *
(‘தமிழா! தமிழா!!’ – இரா.இளங்குமரனார், பக்கம்,11,12.,
2016., திருவள்ளுவர்
நிலையம், 7,
இராமன் தெரு, திருநகர்,
மதுரை – 625006)
---------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக