செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

அம்மாஅஅ.....!


அம்மாஅஅ.....!


உலகுமுன் காணா வொருதனிப் பெருமற
இலகுயர் மாந்த ஏந்தலாந் தலைவ
னீன்றுபுறந் தந்த எந்தமி ழன்னாய்!

ஆன்றவிஞ் ஞால அருந்தமி ழுளத்த
ரனைவர்க்கு மன்னை யானநற் றாயே!

நினையா யிழப்பெலா நெடுகத் தொடர்ந்திடுங்
கொழுமழு நெஞ்சகங் குத்திக் கிழிக்கும்
அழுவே மல்லே மரற்றலு மாற்றேம்!

நெஞ்சு நிமிர்த்தி நெடுங்கை யுயர்த்தி
வஞ்சகங் கொடும்பகை யஞ்சி வெருவுற
வணக்கம் முழக்குவம் வாழ்த்துவை யம்ம!

வணக்கம் வீர வணக்கமெந் தாய்க்கே!

2 கருத்துகள்:

தேவமைந்தன் சொன்னது…

என் உணர்வும் உங்களோடு
அன்னைக்கு வீர வணக்கம்
-தேவமைந்தன்.

உருத்திரா சொன்னது…

ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்து பெற்றுப்

பையலென்றபோதே பரிந்தெடுத்துச்-செய்ய இரு

கைப்புறத்தில் ஏந்தி கனகமுலை தந்தாளை

எப்பிறப்பில் காண்பேன் இனி?