பொன்னம்பலனாரைப் போற்றுகின்றோம்!
தூயதமிழ் தன்மானம் போற்றி வாழ்ந்தாய்! துணிவுடனே மாணவர்க்கும் உணர்த்தி வந்தாய்!
தோயநலம் தமிழுக்கே தொய்வில் லாமல் தொடர்காப்பு வினைபுரிந்தாய்! தொலையாத் தொல்லை
தீயவுளத் தாரிழைத்தும் சிறிதும் மாறாத் திடஞ்சான்ற தமிழ்மறவ! திறலின் வேந்தே!
ஓயலறி யாப்பொன்னம் பலனே! உன்னை உளம்நெகிழ நினைவேந்திப் போற்று கின்றோம்!
- த. ந. - 10-12-2007.