எண்ணுப்பெயர்கள் – ௩ (நிறைவுப் பகுதி)
எட்டு:
எட்டு – பெயர் வடிவம்
எண் – அடை வடிவம்
எட்டு + நாள = எண்ணாள்
எட்டு + ஆயிரம் = எண்ணாயிரம்
எட்டு + கழஞ்சு = எண்கழஞ்சு
எட்டு + வகை = எண்வகை
எட்டு + நாழி = எண்ணாழி
ஒன்பது:
ஒன்பான், ஒன்பஃது என்பவை மாற்று வடிவங்கள்.
தொண்டு என்பது ஒன்பதைக் குறித்த பழைய பெயர்.
ஒன்பது கூட்டு வடிவம்.
ஒன்பஃது (அ) ஒன்பது + பத்து = ஒன்பஃதுநூறு >
தொன்பஃதுநூறு > தொன்நூறு > தொண்ணூறு.
ஒன்பஃது (அ) ஒன்பது + நூறு = ஒன்பஃது ஆயிரம் > தொன்பஃது
ஆயிரம் > தொன் ஆயிரம் > தொள் ஆயிரம் > தொள்ளாயிரம்.
இது, தொளாயிரம் எனவும் வழங்குகின்றது.
இவற்றை மரூஉ என்று கொள்ளாமல், தொல்லாசிரியர் முடித்தவாறே
முடித்துக் காட்டுகின்றனர். இதனை நெறி என்கின்றனர்.
ஒன்பது + ஆயிரம் = ஒன்பதினாயிரம்; ஒன்பதிற்றாயிரம்.
பத்து:
பத்து - பெயர் வடிவம்.
பான், பன், பது, பஃது, பதின் என்பன மாற்று வடிவங்கள்.
ஒன்று + பத்து = ஒருபது; ஒருபஃது
இரண்டு + பத்து = இருபது; இருபஃது
மூன்று + பத்து = முப்பது; முப்பஃது
நான்கு + பத்து = நாப்பது; நாற்பஃது
ஐந்து + பத்து = ஐம்பது; ஐம்பஃது
ஆறு + பத்து = அறுபது; அறுபஃது
ஏழு + பத்து = எழுபது; எழுபஃது
எட்டு + பத்து = எண்பது; எண்பஃது.
ஒருபஃது + ஒன்று = ஒருபத்தொன்று (எண்)
இருபஃது + மூன்றுகல் = இருபத்து மூன்றுகல்.
பத்து + ஒன்று = பதினொன்று; பதிற்றொன்று.
` {பன்னொன்று (மரூஉ) எனச் சிறுபான்மை வரும்)
பத்து + இரண்டு = பன்னிரண்டு
பத்து + மூன்று = பதின்மூன்று; {பன்மூன்று (மரூஉ)}
பத்து + நான்கு = பதினான்கு; {பன்னான்கு (மரூஉ)}
நூறு:
நூறு பெயர் வடிவம் (எழு நூறு)
நூறு + ஆயிரம் = நூறாயிரம்
நூறு + இருபது = நூற்றிருபது
நூறு + பத்து = நூற்றுப்பத்து.
சில எண்ணுப் பெயர்கள் இரட்டித்தல் (எண் அடுக்கு)
ஒவ்வொன்று
இவ்விரண்டு
மும்மூன்று
நன்னான்கு
அவ்வைந்து
அவ்வாறு
எவ்வேழு
எவ்வெட்டு
பப்பத்து (முடிந்தது)