பெரியார் தொண்டர், தமிழ், தமிழினநலப் போராளி “முத்தமிழடியான்” மறைவுற்றார்!
விழுப்புரத்தில் அச்சகத்துறைத் தொழிளியாக இருந்து, தம் 55-ஆம் அகவைக்குப் பிறகு, பெரியார் கொள்கைகளிலும் தமிழ், தமிழின நலன்களிலும் கருத்துச்செலுத்தி அதற்கான செயற்பாடுகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டவர் ஐயா, முத்தமிழடியான் ஆவார். முத்தமிழ்தாசன் என்ற தம் பெயரை தூயதமிழ் உணர்வின் உந்துதலால் முத்தமிழடியான் என்று மாற்றிக்கொண்டவர்.
மூடநம்பிக்கைகள ஒழித்து மக்களுக்கு விழிப்புணர்வூட்ட
‘மந்திரமா, தந்திரமா?’ நிகழ்ச்சிகளைப் பல இடங்களிலும் பலமுறை நடத்திக்காட்டி மக்களுக்குத்
தெளிவூட்டியவர். தமிழ் தமிழர் நலன் தொடர்பான எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்பவர்.
தாய்த்தமிழ்ப்பள்ளி செயற்பாடுகளில் முழுமையாக ஈடுபட்டுத் துணைநின்றவர் முத்தமிழடியான்
ஆவார்.
எண்பத்து எட்டாம் அகவையில், முதுமை நோய்த்தாக்கத்தால்
நேற்று (1-4-2021) விடியற்காலை 5 மணியளவில் காலமான முத்தமிழடியானின் உடல் பகல் பன்னிரண்டு
மணியளவில் விழுப்பரம் மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது.
தமிழ், தமிழர் நலன்காக்க நம்மை ஈடுபடுத்திக் கொள்வதே
முத்தமிழடியான் அவர்களுக்கு நாம் அளிக்கும் பெரு மதிப்பாகவும் போற்றுதலாகவும் அவருக்குச்
செலுத்தும் வீரவணக்கமாகவும் அமையும்!
==============================================================================