ஆட்சியாளரின் நேர்மை, ஒழுங்கு, நாணயக் கேடு!
--------------------------------------------------------------------------------------------------------------
“இந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதிக்குள் 500,
1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய இயலாதவர்கள், ரிசர்வ் வங்கி
அலுவலகங்களில் அடுத்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதிக்குள் அவற்றை டெபாசிட் செய்து
கொள்ளலாம். அப்போது அதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, உரிய காரணந்நைக் குறிப்பிட்டு,
அடையாள அட்டைகளையும் சமர்ப்பிக்க வேண்டும்”
-(தலைமைஅமைச்சர்
மோடி அறிவிப்பு குறித்து) ‘தினமணி’ 9-11-2016 காலை 04-32 பதிப்பில் வந்த செய்தி.
இந்தியர்கள் திசம்பர் 16-க்குப் பிறகு
ரூ500, 1000 தாள்களை மாற்ற முடியாது. அயல்நாடுவாழ் இந்தியர் மட்டுமே 31 மார்ச்சு
2017 வரை மாற்றலாம்!
-
இந்திய ஏம வைப்பகம் (Reserve Bank pf India) செய்தி.
பழைய ரூ500, 1000 தாள்களை வைத்திருப்பது
தண்டனைக்குரிய குற்றம்.
-
இந்திய நடுவண் அரசுச் செய்தி.
மக்கள் விரும்பாத, மக்களுக்கு எதிரான எந்தத்
திட்டத்தையும் நடுவண் அரசு செயல்படுத்தாது! - நெடுவாசல்
போராளிகளுக்கு பொன்.இராதா. உறுதி
ஒப்பந்தம் கையெழுத்தான திட்டத்தை
நிறுத்த முடியாது. ஊர் மக்களுக்கு விளக்கம்
கூறிவிட்டு திட்டம் நிறைவேற்றப்படும்.
-
இந்திய அரசு அமைச்சர்.-------------------------------------------------------------------------