'அமுதசுரபி' மாத இதழில் வெண்பாப் போட்டிப் பகுதியில் ஈற்றடி கொடுத்து வெண்பா எழுதச்
சொல்கின்றனர்.
கடந்த மூன்று இதழ்களில் வந்த என்னுடைய வெண்பாக்கள் :
- கொடுக்கப்பட்ட
ஈற்றடி : நன்றாகச் செய்க நயந்து
என் பாடல் :
நாடு நனிநல்ல! நாடா
தொதுக்கிடுக
கேடு விளைக்கின்ற
கீழ்மைகளை! - தேடுபணி
பொன்றாப் புகழும்
பொதுநலனும் நாடிமிக
நன்றாகச் செய்க
நயந்து!
- கொடுக்கப்பட்ட
ஈற்றடி : நெஞ்சில் எரியும் நெருப்பு
என் பாடல் :
தன்னல வாழ்வே
தமதாக்கித் தம்குடும்ப
இன்னலம் தன்னையே
எண்ணிடுவார்! - என்றென்றும்
வஞ்சஞ் செயவஞ்சார்
வாழ்வை நினைக்கையில்
நெஞ்சில் எரியும்
நெருப்பு.
- கொடுக்கப்பட்ட
ஈற்றடி : என்றும் திருநாள்
எனக்கு
என் பாடல் :
வீதிதொறும்
மாழ்கமது! வேகவுணா! ஊதுபுகை!
ஊதியமும்
கிம்பளமும் உண்டய்யா! – ஏதிங்கே
ஒன்றிவரா மேலாள்! ஒருக்காலும்
சிக்கலிலை!
என்றும் திருநாள்
எனக்கு!
--------------------------------------------------------------------------------------------------