வாழ்க, வாழ்க அரங்க.நடராசனார் ஐயா! ===============================================
புதுவையைச்
சேர்ந்த சிறந்த யாப்பறி புலவர்!
ஈடெடுப்பற்ற
நல்லாசிரியர்!
சிறந்த பல
பா நூல்களை எழுதிய ஒப்பற்ற பாவலர்!
ஐயா
திருமுருகனாரின் ‘சிந்துப்பாவியல்’ இலக்கண நூலுக்கு
உரையெழுதிவர்!
ஐயா ம.இலெ.தங்கப்பாவின் ‘ஆந்தைப்பாட்டு’க்கும் உரையெழுதியவர்!
நம்
அன்பிற்கும் மதிப்பிற்குரிய ஐயா ம.இலெங்கப்பா அவர்களாலும், தமிழிலக்கணச் செம்மல் இசையறிந்தார் புதுவைத் திருமுருகன் ஐயாவாலும் பெரிதும்
பாராட்டப்பட்டவர்!
புதுவைத் 'தெளிதமிழ்',
'நற்றமிழ்'
இதழ்களின்
வெளியீட்டுக்கு ஐயா திருமுருகனார், ஐயா இறைவிழியனார் காலத்திலும் அவர்களுக்குப் பின்னரும் கூடப் பெரும் பங்காற்றியவர்!
விழுப்புரத்தில், ‘பாடல் வளாகம்’ நடத்திய யாப்பிலக்கண வகுப்பைத் தொடங்கி வைத்தவர், முடிவில் நிறைவு செய்தவர்!
ஆழ்கடல் போல் அமைதியானவர்!
அன்பும் பண்பும் மிக்க அரங்க.நடராசனார் ஐயா முழுநலம்பெற்று இன்னும் பல்லாண்டுகள் தமிழுக்கும் தமிழர்க்கும் தம் உழைப்பை அளிக்க நெஞ்சங்கனிய அவர் பிறந்தநாளில் வாழ்த்துவம்!
வாழ்க அரங்க.நடராசனார்!
----------------------------------------------------------------------