பாவலர் நெஞ்சில் பேரறிஞர்
அருந்தமிழ்ப்
பாவரங் கணிசெயுந் தலைவ !
இருந்தமிழ்ப்
பாவலீர் ! பொருந்தவை யமர்ந்த
அறிஞரீர் !
பெரியீர் ! அன்புறு தாய்க்குலச்
செந்தமிழ் உணர்வீர்
! செயல்வல் இளமையீர் !
தோழமை சான்ற தூயநல்
லுளத்தீர் !
ஆழன் பார்ந்தே அனைவரை
வணங்கினேன் !
அண்ணா நூற்றாண் டணிதிகழ்
நிறைவில்
எண்ணிப்
பாவரங் கெளிமையில் அமைத்தனர் !
‘பாவலர்
நெஞ்சில் பேரறி ஞர் ’என
மேவுறு
தலைப்பில் பாவளி என்றனர்! -10
அண்ணா ! அட,ஓ
! எண்ணம்
இனிக்கும்
வண்ணத் திருப்பெயர்
! ஈரா
யிரமாண்(டு)
இழிதளைப் பட்டஎம் இனத்தினைக்
காக்க
எழுச்சியோ
டிளைஞரை ஈர்த்தவர் பெயரிது !
ஆரையும் விடவும் ஆரிய அராவை
நேருறத்
தாக்கி நிலைகெடக் கிடத்திய
ஒருதனிப்
பெரும்பணிப் பெரியார் தேர்ந்தசெந்
தெருள்தெளி
மாணவர் தீந்தமிழ்ப் பெயரிது !
மூடுற்ற
தமிழினப் பீடு விளக்கிய
ஈடிலா
அறிஞரின் சூடெழும் பெயரிது ! -20
தாய்நிலந்
தன்னைத் தமிழ்நா டென்றே
வாய்மகிழ்ந்
தழைக்க வைத்தவர் பெயரிது !
ஆட்சியில்
கல்வியில் காட்சியில் இசையில்
நீட்சி தமிழின வீழ்ச்சியென்
றுணர்த்தி
நலங்களைச்
சிதைத்தோர் கலக்குற துலக்கமாய்ச்
சொலல்வல்
திறத்தரின் சுருக்கப் பெயரிது !
செத்ததை
விலக்கிய செந்தமிழ்த் திருமணம்
ஒத்தொப்
பிடவோர் சட்டஞ் சமைத்தவர் !
பிறப்பிற்
பிரிவினை இறக்கங் கூறிய
சிறப்பிலா
ஆரிய மாயை செகுத்தவர் ! -30
தமிழர்
உணர்வுத் தழல்தீப் பரவவும்
இழிவொழித் திவ்வினம் ஏற்றமுற்
றிடவும்
அயரா துழைத்த வயவரி
யாரவர் !
பெயராப்
பெரும்புகழ்ப் பேற்றில் நிலைத்தவர்
!
இராசாசி
சூழ்ச்சியில் நேரு தட்சிண
இராச்சியம் கொணர இங்கதற்
கெதிராய்
மொழிவழி அரசுகள் வழிவழி
அமைய
கழிபெரு
மாற்றலாய்க் கடுங்குர லார்த்தவர்!
இந்திய தேசிய மெதிர்த்தா
ராயினும்
நந்தமி ழினநல நாட்டமிக்
கிருந்தும் -40
தெரிந்தே திராவிடத்
தேசியம் பேசி
அருந்தமிழ்த்
தேசியம் பொருந்திடா தெதிர்த்தமை
ஒப்போலை அரசியல் தப்பதே! சறுக்கலே !
இப்பிழை யிவர்புகழ் இறக்கிட
வில்லை !
செந்தமிழ்ச் சீருரை
தந்திடும் வெற்றியால்
எந்த நிலையையும் சந்தித்த
திவர்நா !
அடுக்கு
மொழியுடன் அண்ணா தமிழை
ஒடுக்கம்
உடைத்தே உலாவரச் செய்தார் !
இருமொழி போதும் இந்திவேண்
டாவென
மருட்டலாய்த்
திட்டம் மறுத்துக் கொணர்ந்தார் ! -50
அறிஞர் இவரென பெர்னாட்
சாவென
அறிவித் தேத்தினார்
அண்ணாவைக் ‘கல்கி’ !
ஆங்கிலந் தனிலிவர் பாங்குற
ஆற்றிய
ஓங்குரை நேருவின் உளங்கவர்ந்
தீர்த்தது !
ஈழத் தமிழர் இன்னலைத்
தீர்க்க
ஆழவு ணர்ந்தே அன்றவர்
முயன்றார் !
ஓர்வோம் அண்ணா உயிர்த்திருந்
தாரேல்
ஓரிலக்
கம்பேர் சூருற மடிவரோ ?
இன்றுமூ
விலக்கம் இழிவினி லின்னலில்
குன்றி யங்கவர் நின்றிட
விடுவரோ ? -60
தன்னலந் தன்னுடை
இன்குடும் புறுப்பினர்
நன்னலங் கருதா செந்நலத்
தொண்டர் !
ஒருமுறை அண்ணா உரோமிற்குப் போனார்
திருவுறை போப்பிடம்
தேர்ந்திவர் கேட்டதோ
விடுதலை மறவர் இரானடே விடுதலை
வடுவறுந் தொடுப்பில்
எடுப்புற அடுக்கி
அண்ணா கேட்டதா லவர்விடு
பட்டார் !
எண்ணிய
வெல்லாம் நன்மாந்த நேயம் !
பெரிதுபெரி தண்ணா பெரும்புகழ்
விரிக்க!
உரிமைபெற்
றிங்குநாம் உயர்வுறற் கெனவே -70
ஆர்த்தார்;
உழைத்தார்; அதன்வழி
சீர்த்திசால்
தமிழினங் காத்தனர் அவரே!
----------------------------------------------------------------------------------------------------------
.