முதுமுனைவர்
இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்! – ௪.
------------------------------------------------------------------------------------
தமிழா,
உலகின் மூத்த குடிநீ உலகின் மூத்த மொழி உன்னுடையது.
பல்லாயிரம் ஆண்டுகளின் முன்னே, குமரியொடு வடவிமயம் வரை வாழ்ந்தவன். ஆணை செலுத்தியவன்.
நீ சுற்றாத கடலில்லை.
வெல்லாத நாடில்லை.
ஆனால், உனக்காக ஒரு நாடு உலகில் உள்ளதா?
உன் உயர்மொழி உலகமன்றம் ஏறுகிறதா?
உன் பிறந்த மண்ணிலேயே சாகடிக்கத் துணிந்த நீ, எங்கே அதனை ஆள வைப்பாய்?-
எப்படி வாழவைப்பாய்?
(‘தமிழா!
தமிழா!!’ – இரா.இளங்குமரனார், பக்கம்,7., 2016., திருவள்ளுவர் நிலையம், 7, இராமன் தெரு, திருநகர், மதுரை – 625006.)
------------------------------------------------------------------------------------------------------------