இருபத்து நான்கு வரிகளில் -
அண்ணாவின் இனிய நினைவேந்தல்!
அண்ணா! அட,ஓ! எண்ணம் இனிக்கும் திண்ணியர் திருப்பெயர்! ஈரா யிரமாண்
டிழிதளைப் பட்டஎம் இனத்தினைக் காக்க
எழுச்சியோ டிளைஞரை ஈர்த்தவர் பெயரிது!
ஆரையும் விடவும் ஆரிய அரவை -5
நேருறத் தாக்கி நிலைகெடக் கிடத்திய
நேருறத் தாக்கி நிலைகெடக் கிடத்திய
ஒருதனிப் பெரும்பணிப் பெரியார் தேர்ந்தசெந் தெருள்தெளி மாணவர் தீந்தமிழ்ப் பெயரிது!
மூடுற்ற தமிழினப் பீடு விளக்கிய
ஈடிலா அறிஞரின் சூடெழும் பெயரிது! -10
ஈடிலா அறிஞரின் சூடெழும் பெயரிது! -10
தாய்நிலந் தன்னைத் தமிழ்நா டென்றே வாய்மகிழ்ந் தழைக்க வைத்தவர் பெயரிது!
ஆட்சியில் கல்வியில் காட்சியில் இசையில்
நீட்சி தமிழின வீழ்ச்சியென் றுணர்த்தி
நலக்கலை சிதைத்தோர் கலக்குற துலக்கமாய்ச் -15
சொலல்வல் திறத்தரின் சுருக்கப் பெயரிது!
நலக்கலை சிதைத்தோர் கலக்குற துலக்கமாய்ச் -15
சொலல்வல் திறத்தரின் சுருக்கப் பெயரிது!
செத்ததை விலக்கிய செந்தமிழ்த் திருமணம்
ஒத்தொப் பிடவோர் சட்டஞ் சமைத்தவர்!
பிறப்பிற் பிரிவினை இறக்கங் கூறிய
சிறப்பறு 'ஆரிய மாயை' செறுத்தவர்!
-20
தமிழர் உணர்வுத் தழல்'தீப் பரவுக'!
இழிவொழித் தெம்மினம் ஏற்றம் பெறுகென
ஆர்த்தவர்; உழைத்தவர்; அதன்வழி
ஆர்த்தவர்; உழைத்தவர்; அதன்வழி
சீர்த்திசால் தமிழினம் காத்தவர் பெயரிதே! -24
***************************************************************