புதன், 17 செப்டம்பர், 2008

ஆங்கில நாளேட்டில் சமற்கிருதப் புரட்டு!

  
                        
             (புதுச்சேரியிலிருந்து 1999ஆம் ஆண்டில் தனியார் சுற்றுக்கு மட்டுமென வெளிவந்தது தமிழருவி' என்னும் இருமதி இதழ். அத் தமிழருவி 14-04-1999ஆம் நாளிட்ட இதழில் வந்த இக்கட்டுரை, தேவை கருதிச் சிறுசிறு மாறுதல்களுடன் மீண்டும் வெளியிடப் படுகின்றது)


     1.1    மாந்தரின் பிறப்புநேச்சி (accident)  நிகழ்வு போன்ற தென்கின்றது ஒரு பழமொழி.  எவரும் தாம் விரும்பிய நாட்டில்விருப்பமான மக்கள் கூட்டத்தில் பிறக்கின்ற வாய்ப்பைப் பெற்றிருக்கவில்லை. பிறந்த பின் தம் ய் நாட்டின் மீதும்தாம் பிறந்த இனத்தின் மீதும்தாய்மொழியின் மீதும் பற்றுள்ளவராக இருப்பது இயல்பே.
     ஆனால்- நாட்டுப்பற்றும்இனப்பற்றும், மொழிப்பற்றும் பொய்யைப்  போற்றுவதாகவும், உண்மையை மறைத்து ஒதுக்குவதாகவும் இருந்து கொண்டு,  பிறிதோரினத்தைத் தலையெடுக்க விடாமல் வல்லழுத்தமாக அழுத்தி வைத்திருக்கும் வரலாறு இம்மண்ணில் தொடர்ந்து கொண்டு
இருக்கின்றது.
     அவ் வரலாற்றின் ஒரு சிறு கூறு எப்படி இருக்கின்றது 
என்பதைத் தமிழர் அறிந்திருத்தல் கட்டாயத் தேவையாகும்.

     1.2    இந்தியாவில்குறிப்பாகத் தென்னிந்தியாவில்பேரளவு விற்பனையாவதும் உலகெங்கும் உள்ள இந்தியர்  படிக்கக் கூடியதுமான ஆங்கில நாளிதழாக 'தி இந்து'  இருக்கின்றது.
     அந்நாளிதழ்,  அடிப்படைச் சான்றுகள் இல்லாமல் 
செயதிகளை வெளியிடாத நாளிதழ் என்று பரவலாகத் நம்பப் படுகின்றது.  ஆனால், அந்நம்பிக்கைக்கு அந்நாளேடு தகுதி உடையது தானாஎன்று  எவரும் ஆய்ந்து பார்த்ததில்லை. 
     அந்நாளிதழில்"ஆசிரியருக்கு மடல்கள்" பகுதியில் அடிக்கடி இடம்பெறும்  மடல்கள் சமற்கிருத மொழியைப் போற்றிப் புகழ்ந்து உச்சியில் தூக்கி வைத்துக் கூத்தாடுவனவாக இருக்கும். அத்துடன் டவேஅம்மடல்கள் தமிழையும் பிற மொழிகளையும் தாக்கியும் இழித்தும் பழித்தும் எழுதப்  பட்டனவாக இருக்கும்.      அம்மடல்களை மறுத்து எதிர்த்து எழுதப்படும் எந்த 
ஒரு மடலையும் அந்த நாளேட்டில் காண்பது அரிதினும் அரிதாக இருக்கும்.

     1.3    மக்கள் பேசாத மொழியானாலும் சமற்கிருதத்தை இங்ஙனம் தாங்கி நின்று, உண்மைக்கு மாறாகப் போலிப் பெருமை பேசிஅதனை அதிகார இருக்கையில்
எப்போதும் அமர்த்தி வைத்துக் கொண்டிருப்பதன் காரணம் என்ன?  
     இக் கேள்விக்குத் தந்தை பெரியார் விளக்கம் தருகிறார்: 
 "சமற்கிருதம் பரவினால்தான் பார்ப்பனர் வாழ முடியம்சுரண்ட முடியும்;  நம்மைக் கீழ்சாதி மக்களாக ஆக்க முடியும்; அவன் பிராமணனாக இருக்க முடியும். சமற்கிருதத்தின் நலிவு, பார்ப்பன மேலாளுமையின் சரிவு என்று உணர்ந்து பார்ப்பனர்
ஒவ்வொருவரும் முழு எச்சரிக்கையோடும் விழிப்போடும்
செயல்பட்டு வருகின்றனர்" (விடுதலை. 15-2-1960) 
     இலக்கியம் இசைநாட்டியம் முதலிய  கலைகள் உள்ளிட்ட பணபாடு  நாகரிகம் முதலியவற்றில் தமது மேலாளுமையைச் செலுத்துதற்குப்  பார்ப்பனர் பயன்படுத்தும் கருவிகளுள் முதன்மைக் கருவி சமற்கிருதம் என்று மறைமலையடிகளும் பாவாணரும் பாவலரேறு பெருஞ்சித்திரனாரும்  மீண்டும் மீண்டும் கூறி வந்துள்ளனர்.

1.4 கடந்த இரண்டாண்டு காலத்தில் சமற்கிருதத்தைப்                                  
பற்றிய உண்மையை ஓரளவு கூறும் மடலாக ஒரே ஒருமடல் 6-10-1997ஆம் நாள் அந்நாளிதழில் இடம் பெற்றது. ஆனால்அம்மடல் வெளிவந்த பிறகுஅத்தாளில் தொடர்ந்து வந்த பல மடல்கள், அம்மடல் எழுதியவரைக் கண்டித்தும்அவர் கூறிய உண்மைகளை மறுத்தும் பலவாறான உண்மைக்கு மாறுபட்ட செய்திகளை வெளிப்படுத்துவனவுமாக இருந்ததோடு தமிழையும் பிற மொழிகளையும் தாழ்த்தி இழிவு செய்வனவாகவே இருந்தன.
        
     2.1 6-10-97ஆம் ளிட்ட 'தி இந்து'வில் வெளிவந்த அம்மடல் இதுதான்: 
அய்யா,
     திரு கே.வி.சர்மாவும்திரு. என்.கங்காதரனும் "சமற்கிருதம் உயிரோடு  இருக்கிறது" என்ற தலைப்பில் (தி இந்துசெப்.11) எழுதிய மடல்களில் வெளிப்படுத்திய கருத்துக்கள் அதிகார அடிப்படையற்றவை கோளாறான கண்ணோட்டத்தில் பார்க்கப்                             பட்டவை. அவர்கள் பகுத்தறிவுக் கொத்த வகையில் தருக்கமிடுவதை விட கழிமிகை உணர்ச்சியை வெளிப்படுத்தவே 
முயன்றிருக்கின்றனர்.
     ஒருவேளைசமற்கிருதத்தின்பால் அவர்களுக்குள்ள பற்றைக் காட்டவும்சமற்கிருதம் மட்டுமே ஓர் உயர்தனிச் செம்மொழி என உலகின் கவனத்திற்குக் கொண்டு வரவும் முயற்சி செய்திருக்கலாம்.
சமற்கிருதம் பிறக்கவுமில்லைசாகவுமில்லை. எனவேஅதன் உயிர்ப்பு ஒரு  கைப்பாவை - பொம்மை - யினுடையதைப் போன்றதே.
     சில பல்கலைக் கழகங்களில் விருப்பப் பாடங்களில் ஒன்றாகச் சமற்கிருதம் புதிதாக வைக்கப் படடுள்ளது என்ற அவர்களின் சான்றுரைஇந்நாட்டின் பட்டியலிட்டுள்ள மொழிகளுக் குள்ளவற்றைப் போன்றுப்  'பயிற்று மொழி என்ற தகுதியை அம்மொழிக்குத் தரவில்லை. சமற்கிருதம் உயிரோடு 
இருக்குமானால்தமிழ்நாட்டில் அம்மொழியைப் பேசுவோர்              விழுக்காட்டினைத் துல்லியமாக அவர்களால் ய்ப்பிக்க முடியுமா?
திரு.சர்மாவும் திரு.கங்காதரனும் திருமணம் கோவில் வழிபாடு போன்ற நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் சமற்கிருதத்தைப் பற்றி மட்டுமே  அறிந்திருக்கக் கூடும்.
     சமற்கிருதம் ஒவ்வொரு பயன்பாட்டு நிலையிலும் ஒவ்வொரு நாள் பயன்பாட்டிற்கும் தொடர்பு கொள்வதற்கும் பயன்படுவதாகப்
பொத்தம் பொதுவாகச் சொல்வது தவறான கூற்றாகும்.
     வெவ்வேறு  காலக் கட்டங்களில் வரலாற்றுத்துறைத் தலைவர்களாக இருந்து சென்னைப் பல்கலைக் கழகத்தை அணி செய்த பி.டி.சீனுவாச (அய்யங்கா)ரும்  இராமச்சந்திர (தீட்சித)ரும் எழுதியவற்றைப் பார்க்கும்  பொறுமை அவர்களுக்கு இருக்குமா
     தமிழ்ச் சொற்கள் சமற்கிருதத்தில் கலந்துள்ளமையைச் சில எடுத்துக் காட்டுகளே விளக்கும். சமற்கிருதம் இந்திய  மொழிகளுக் கெல்லாம் மூலம் என்ற தவறான நம்பிக்கையை எளிதில் தவறெனக் காட்டி வீழ்த்திவிட முடியும்.  
            -எசு. அபிராமவல்லிபெங்களூர்.

     இம்மடல் வெளிவந்த பின்னர்புற்றீசலகளாத் தொடர்ந்து வெளியிடப் படுகின்ற பல மடல்களில்கூறப் படுகின்ற செய்திகளுக்கும் உண்மை நிலைகளுக்கும் உள்ள வேறுபாடுகள்  மலைப்பைத் தருவனவாக உள்ளன.

     3.1 'தி இந்துநாளிதழில் வந்த சமற்கிருதப் புகழுரை மடல்களில் காணப்படும் பெருமைமிக்க கூற்றுசமற்கிருதம்  அனைத்து மொழிகளுக்கும் தாய் என்பதாகும். உலகின் பல மொழிகளுக்கும் ஆதன்(ஆன்மா)-ஆக இருப்பது சமற்கிருதம் என்றும் எழுதுகின்றனர். இந்தியாவிலும் ய்ரோப்பாவிலும் உள்ள பல       
மொழிகளும் ஒலிமாற்றமுற்ற சமற்கிருதம் என்றும் ஒருவர் 
எழுதினார்.

     3.2 மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் கீழ்க் காணுமாறு கூறுகிறார்:
     "ஒரு காலத்திலும் உலக வழக்காய் வழங்காத அரைச் செயற்கையான இலக்கியக் கலவைமொழி எங்ஙனம் தாய்மொழியாய் இருத்தல் கூடும்ஒரு மொழி முதற்கண் தனிமொழியாய் இருந்தால்அன்றோ- பின்னர்த் தாய்மொழி
யாகவும் அமையும்தமிழ், திரவிடத்திற்குத் தாயும்  ஆரிய மொழிகட்கு மூலமுமா யிருக்கும் போது அவ்வாரிய மொழிகளுள் ஒலியளவில் முது வளர்ச்சி யடைந்த இலக்கியக் கலவை மொழியாகிய சமற்கிருதம் எங்ஙனம் உணமையில் பன்மொழித் தாயாயிருத்தல் ஒல்லும்?" - (தென்மொழிஇயல்1. இசை4. பக்கம்9)

     3.3 'samskrita' -என்ற சொல்லுக்குரிய முதற் பொருளாக அறிஞர் மானீர்  வில்லியம்சு அவர்கள், ‘put together’ - (ஒன்றாக்குஒன்றாகச் சேர்த்து வைஒருங்கிணை)  என்பதனையே கூறுகிறார் (பக்கம்1120,சமற்கிருத - ஆங்கில
அகராதி)  என்று மொழியியலர் எடுத்துக் காட்டுகின்றனர்.
     எனவே, சமற்கிருதம் தனிமொழியுமன்று; தாய்மொழியுமன்று. அஃதோர் கலவை மொழி என்பது உறுதியாகின்றது.

     3.4 மொழியறிஞர்கள்,  தமிழின் சில உயிர்மெய் முதல்களை ரகரஞ் சேர்த்து, த்ரப்ர எனப் புணரெழுத்துக்க ளாக்கித் திரிப்பது வடசொல்லார் வழக்கமென விளக்கிஒரு நெடும் பட்டியலையே எடுத்துக் காட்டாகக் காட்டுகிறார்கள்.      தமிழ்ச்சொல் 'மெது'  சமற்கிருதத்தில் 'ம்ருதுஎன்று மாறும்.
பவளம் 'ப்ரவாளம்என்றாகும். 
படி 'ப்ரதிஆகும்.
திடம் 'த்ருடஆகி 'தைரியஆகும். 
இப்பட்டியல் நீண்டதாகும். 
இப்பட்டியலைக் கண்ணுற்ற பிறகு டிவு செய்யமுடியும்  ஒலிமாற்ற முற்ற தமிழ்ச் சொல்லேசமற்கிருதச் சொல்  என்று!


     3.5 "நாகரிக உலகோடு தொடர்பு கொள்வதற்கு முன்பாக எழுத்துக் கலை அறியாதவர்கள் ஆரியர்கள்" என்று கூறுகிறார்  'உலகவரலாறுஎழுதிய எச்.சி.வெல்சு.
     "வேதங்களை  இயற்றியவர்களுக்கு எழுத்துக்கலை தெரிந்திருந்தது எனபதற்கான சான்றோ அடிப்படையோ இல்லை" -என்று 'நாகரிக வரலாறுநூலின் ஆசிரியர் வில்டுராண்டு கூறுகிறார். 
     "அநாசசு" என்று தங்களால் எள்ளி நகையாடப் பட்ட திராவிடர்களின் எழுத்துக்களையும் குறியீடுகளையும்                           பயன்படுத்தியே தங்களின் எழுத்துக்களை ஆரியர் அமைத்துக் கொண்டனர்" என்று கூறுகிறார் ஈராசுபாதிரியார். 
 (பக்கம்13,சமற்கிருத ஆதிக்கம்) வெளிநாட்டு அறிஞர் கூறினால்தான் ஏற்போம் என்பார்க்கு மேற்கண்ட 
மூவரின் கூற்றுகளே போதுமானவையாய் இருக்கும்.

     3.6 "சிந்துவெளி மக்கள் எழுதததெரிந்திருந்தனர். கலைத் துறையில் முன்னேறி யிருந்தனர். இருக்குவேத கால ஆரியர்கள் இவ்வகையில் முன்னேறி யிருக்கவில்லை" -என்று வரலாற்று அறிஞர் இரமாசங்கர் திரிபாதி கூறுகிறார். (பக்.40, History of Ancient India) 
     இனிசிந்துவெளி மக்கள் திராவிடர்கள் என்று இந்திய வெளிநாட்டு  அறிஞர்கள் உறுதிப்படுத்தி உள்ளனரென்றும் 'தராவிடம்என்ற பெயர் வடமொழியில் தமிழையே குறிப்பது என்றும் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் விளக்குகிறார். (பக்.70தமிழ் முழக்கம்) 
     "தமிழ் என்னும் சொல் முதலாவது வடமொழியில் திரிந்த வடிவம்  'த்ரமிளம்என்பதே. ழகரம் வடமொழியி லின்மையாலும் உயிர்மெய்ம் முதலை மெய்ம்முதலாக்கி ரகரத்தை வழிச்செருகல் அம்மொழிக்கியல்பு ஆதலானும், அச்சொல் அம்மொழியில் அவ்வடிவை அடைந்ததென்க" என்றும்,
     "திரமிளம்” என்னும் சொல்லிற்கு (1) பஞ்ச திராவிட தேசங்கள் (2) தமிழ் என இருபொருள் கூறும் -சென்னைப பல்கலைக் கழகத் தமிழகராதி!" என்றும்
     "த்ரமிளம் என்பது பின்பு ‘த்ரமிடம்’ எனத் திரிந்ததுத்ரமிடம் என்பதும் சிறிது காலத்தின் பின் ‘த்ரவிடம்’ எனத் ரியலாயிற்றுஇவ் விறுதி வடிவத்தின் நீட்சியே ‘த்ராவிடம்’ என்பது; இது தமிழில் திராவிடம் என்றாகும்" என்றும் பாவாணர் எடுத்துக் கூறுவார்.

     4.1 "சமற்கிருதம் செத்த மொழியில்லைவாழும் மொழி", "ஒவ்வொரு வீட்டிலும் சமற்கிருதம் வாழ்கிறது" - என்று அவ் வாங்கில நாளேட்டில் வந்த பெரும்பாலான மடல்கள் குறிப்பிடுகின்றன. ஆனால்உண்மை நிலை என்ன
சமற்கிருதத்தைப் சமற்கிருதத்தைப் பேசுகின்றவர்கள்        இருக்கின்றார்களா?  
     அபிராமவல்லி அம்மையார் கேட்டதைப் போல்சமற்கிருதம் பேசுகின்றவர்கள் தமிழ்நாட்டில் மட்டுமன்றுஇந்தியா முழுமையிலும் எத்தனை விழுக்காட்டினர் என்று கூற முடியுமா?
கருநாடக மாநிலத்தில் சில சிற்றூர்களி லுள்ள மக்கள் அனைவரும் 
சமற்கிருதமே பேசுகின்றனர் எனப் பச்சைப் பொய் புளுகும் இவர்கள்அவ் வூர்களின் பெயரைச் சொல்வதில்லை. அதிகார அடிப்படையில் சான்றுகள் எதையும் தருவது மில்லை!
     திருமணம்இறப்புக்குப்பின் நடத்தும் சடங்குகள் போலும் நல்லது கெட்டதிற்கு அழைக்கப்படும் கரணப் பார்ப்பனர் தப்பும் தவறுமாகப் பொருள் தெரியாமல் ஒப்பிக்கும் வடமொழி ஒப்பித்தலைத்தான் நாம் பார்த்தும் கேட்டும் வருகின்றோம்.
இதை எண்ணிக் கொண்டேஒவ்வொரு வீட்டிலும் சமற்கிருதம் ழ்கிறது என்ற கொஞ்சமும் உண்மை கலப்பற்ற பொய்யை எழுதுகின்றார்கள். 
     "மன்பதை வாழுமட்டும் சமற்கிருதம் வாழும்" என்று ஒரு மடலில் எழுதப் பட்டிருந்தது. மன்பதை அல்லது மக்கட் பரப்பு என்றால் சமற்கிருதமொழியில் வலிந்து பேச முயன்று கொண்டிருக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கை
யிலான பார்ப்பனர் மட்டுமே என்று பொருள் கூறுகின்றனரா
என்ற ஐயம் எழுகின்றதல்லவா

     5.1 சமற்கிருதம் நிறைவானது; வளமானதுதுப்புரவாக்கப் பட்டதுவிந்தையானது என்றெல்லாம் வில்லியம் சோன்சு       என்பார் எழுதியிருக்கிறார் என்றும்சமற்கிருதத்தில் உள்ள கருத்துகள்கொள்கைகள் பல ஐரோப்பிய எழுத்தாளர்களால் கையாளப் படுகின்றன. என்றும்சமற்கிருதம் ஒரு சான்றடிப்படை (reference) மொழி என்றும் புகழ்கின்ற மடல்களும் அச் 
செய்தித் தாளில் வருகின்றன. இவை தொடர்பாக அறிஞர்கள் கூறும் 
கருத்துக்கள் தெளிவைத் தருவனவாக உள்ளன. 

     5.2 பரிதிமாற் கலைஞர் என்றுத் தம் பெயரை மாற்றிக் கொண்ட 
வி.கோ.சூரிய நாராயண சாத்திரியார் 'தமிழ்மொழியின் வரலாறுஎன்ற அவருடைய நூலில் பக்கம் 27-ல் "பிராமணர்கள் தமிழரசர்களிடம் அமைச்சர்கள் எனவும்மேலதிகாரப் பிரபுக்களெனவுமஅமைந்து கொண்டனர். தமிழரிடத்திருந்த பல அரிய விஷயங்களையும் மொழி பெயர்த்துத் தமிழர்
அறியுமுன்னரே அவற்றைத் தாமறிந்தனர் போலவும் வடமொழியினின்று தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர்" என்று கூறுகின்றார்.
     அவரே"தமிழர்களின் மறைநூல் மந்திரநூல் போன்ற அரிய நூல்களைச் சமற்கிருதத்தில் மொழிபெயர்த்துக் கொண்டுமூல நூல்களை அழித்துவிட்டு, வடமொழியினின்றே அவ்வரிய கருத்துக்கள் வந்தன போலக் காட்டினர் பிராமணர்" என்று எழுதியுள்ளார். (பக்.15தி.வை.சொ.சமற்கிருத ஆதிக்கம்)

     5.3 "தொன்னூல்களான தென்னூல்க ளெல்லாம் வடமொழியில் பெயர்க்கப்பட்டபின்அழிந்தும் அழிக்கப்பட்டும் போயின" என்று பாவாணர் குறிப்பிடுகிறார் (தமிழ் வரலாறு -ஞா.தே)
     "சமயம்நுண்கலைகள்தொழில்கள்மருத்துவம்இலக்கியம் போன்றவை பெரிதும் திராவிட மூலத்தன -அடிப்படையினஅவை சமற்கிருத மொழியில் விளக்கப் பட்டுள்ளன -பெயர்த்தெழுதப் பட்டுள்ளன -பாதுகாக்கப் பட்டுள்ளன. அதனாலேயே அவை திராவிடர்களுடையன அல்ல என்றாகிவிடா" - என்கிறார்  தமிழறிஞர் முனைவர் தமிழண்ணல்.(பக். 38.சமற்கிருத ஆதிக்கம்)

     5.4 "நாட்டுப் பெயரையும்தெய்வங்களின் பெயரையும்ஊர்ப் பெயர்களையும்நம் பல்துறைக் கருத்துக்களையும், நூல்கள்,                                  அனைத்தையும் சமற்கிருதச் சொற்களால்  மறைத்தும் மாற்றியும் நமது பண்பாட்டை ஆரியமயமாக்கித்  தங்களுடைய தாக்கிக் கொண்டு நம்மையும் உலகினையும் நம்பவைத்துவிட்டனர்" -என்று தி.வை.சொக்கப்பா கூறுகிறார்.(பக்24சமற்கிருத ஆதிக்கம்)

     6.1 பல தொழில்நுட்பப் பாடங்கள் சமற்கிருதத்தின் வழி கற்பிக்கப் படுவதாகவும் அந்த ஆங்கில நாளேட்டில் வந்த மடல் கூறுகின்றது.
     அபிராமவல்லி அம்மையார் தம் மடலில் குறிப்பிட்டவாறு சில பல்கலைக் கழகங்களில் விருப்பப் பாடங்களில் ஒன்றாகச் சமற்கிருதம் வைக்கப் பட்டுள்ளது என்பதே உண்மையாகும். தொழினுட்பக் கல்விக்குப் பயிற்றுமொழியாகச் சமற்கிருதம் எங்குமே இருக்க வில்லை என்பதே உண்மை.
அங்ஙனம் இருககுமானால்சரியாக எந்தப் பல்கலைக்கழகத்தில்
அவ்வாறு பயிற்று மொழியாக உள்ளதென்று ஒரு மடலிலும் கூறாததேன்?

     7.1 பேச்சுமொழியாக இல்லாவிட்டாலும் அன்றாட வாழ்வில் சமற்கிருதத்தின் தாக்கம் நீர்ஒளிகாற்று போலும் இன்றியமையாத தாகிவிட்டது என்றும்கூட எழுதுகிறார்கள். கற்பனை உலகில் அல்லது  முட்டாள்களின் துறக்கத்தில் இருக்கின்றார்களா? இல்லை எதையும்எழுதலாம்மற்றவர்களுக்கு எதுவும்
தெரியாது என்ற எண்ணமா? – என்று கேட்கத் தோன்றுகின்றது அல்லவா?
சமற்கிருதம் இன்றேல் மூச்சுயிர்க்க முடியாதா
சமற்கிருதம் இன்றேல் பார்க்க முடியாதா
சமற்கிருதம் இன்றேல் உலகம் வறண்டுவிடுமா
புரட்டு! இதுவன்றோ உலகப் பெரும் புரட்டு!
இளைஞர்கள் சிந்திக்கத் தொடங்கி விட்ட பின்பும் இப்புரட்டு தொடர்வதா?

     8.1 தமிழில் பல சமற்கிருதச்சொற்கள் கலந்துள்ளன. அப்பர் தேவாரத்தில் பேரளவு சமற்கிருதச் சொற்கள் உள்ளன வென்றும் க்ஷேமம்விசேஷம்குருணைமூர்த்திகீர்த்திவிஞ்ஞானம்சக்கரை போன்ற சொற்களைப் பயன்படுத்துகிறோம் என்றும் அம்மடல்களில் சொல்கின்றனர். தூயதமிழும் சமற்கிருதச் சொற்கள் கலந்த கலவைதான் என்றும் கூட ஒருவர் எழுதினார்.
     திட்டமிட்டு வடசொற்களைப் புகுத்தித் தமிழ்ச் சொற்களை வழக்கொழியச் செய்த சூழ்ச்சியாளர்கள்மட முடவர்களாகவும் மத மடவர்களாகவும் இருந்த தமிழரசர்களை மயக்கி அவர்களின் துணையோடும் இம் மொழிக்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். எனவேதான்தமிழில் வடசொற்கள் சிறிது சிறிதாகச் சேர்ந்தன.
     இந்நிலையிலும்தனித்தமிழ் இயக்கங்கண்ட நிறைதமிழ் மலையாம் மறைமலையடிகள்மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர், 'தென்மொழி' ஆசிரியர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலானோரின் உறுதியான முயற்சியால்வடசொற்களை விலக்கித தவிர்த்து தமிழ் தனித்து இயங்கும் என்ற உண்மை நிலைநாடடப் பட்டுள்ளது.
     'அறிந்தேவலிந்தே வடசொற்களைக் கலந்து எழுதுகிறவர் தமிழுக்கு எதிரிதமிழ்ப்பகைவர்என்று அடையாளங் கண்டுப் புரிந்துகொள்ளக் கூடிய நிலைமை இன்று உருவாக்கப் பட்டுள்ளதை மறுக்க இயலாது.
    
     8.2 இக்கால் க்ஷேமம்விசேஷம்மூர்த்திகீர்த்திஎன்று எந்தத் தமிழரும் எழுதுவதும் இல்லைபேசுவதும் இல்லை. நலம் க்ஷேமத்தை ஓட்டி விட்டது. விசேஷம்சிறப்பால் துரத்தப்பட்டு விட்டது. தமிழின் சீர்த்தியே கீர்த்தியாய் வழங்குகிறது. உடல்வடிவம்கடவுள் முதலிய பத்துப் பொருள்களை 
உணர்த்தும் தமிழ்ச்சொற்கள் இருக்கமூர்த்தியை விடாமல் பற்றி 
யிருப்பவர்கள் குறிப்பிடும்படியான சிலரே. அறிவியல் விஞ்ஞானத்தை அகற்றிப் பலகாலம் ஆயிற்று. ஞானம்சக்கரை தமிழ்ச் சொற்களே. ஐயம் உள்ளவர்கள் தக்க தனித்தமிழ் அறிஞரை அணுகித் தெளிவுபெறலாம்.

     8.3 முனைவர் குண்டர்ட் எனபார் எழுதிய 'வடமொழியில் ிராவிடக் கூறுகள்'(1969,செருமனி) - என்ற கட்டுரையும் கிட்டல் எனபார் எழுதிய 'வடமொழி அகராதிகளில் திராவிடச் சொற்கள்என்ற கட்டுரை(1972)யும் உண்மையைக் கூறுகின்றனவாயுள்ளன.

     8.4 "தமிழ்ச்சொல்லா வடசொல்லா என்று ஐயுறத்தக்க நிலையில் உள்ள சொற்களை யெல்லாம் தயக்கம் இன்றி வடசொல் என்று கூறும் கண்மூடி முடிபும் நெடுங்காலம் இருந்துவந்து தீமை விளைத்த தாகவும்வடமொழி அகராதியியலரும் இலக்கணிகளும் தமிழ்ப் புலவர்களைப் போல் நடுவுநிலைமைப் போக்குடன் சொற்களை ஆராய முற்படாமல்எல்லாவற்றையும் வடசொல் 
என்று குறிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தனர்" என்றும் கால்டுவெல் 
(திராவிட மொழொகளின் ஒப்பிலக்கணம்பக்.453) குறிப்பிடுகிறார். 

     8.5 "வடமொழிதிராவிட மொழிகளிலிருந்து பல சொற்களையும் கருத்துக்களையும் கடன் பெற்றது. இருக்கு வேதத்தில் கூட இருபது திராவிடச் சொற்கள் இருப்பதைப் பரரோஎமனோ போன்றவர்கள் கூறியுள்ளனர்" என்று அறிஞர் ..சுப்பிரமணியம் (பக்.243சமற்கிருத ஆதிக்கம்) எடுத்துக் கூறியுள்ளார்.
     "ஆரியருடைய முதனூலாகிய ரிக்கு வேதத்தில் பல தமிழ்ச் சொற்கள் அணு, இராகணம்பழம்பூசனை போன்றவை ஆளப்பட்டுள்ளன" என்று பேரா.தி.வை.சொக்கப்பா (பக்.13சமற்கிருத ஆதிக்கம்) கூறியுள்ளார்.

     8.6 "ஆரியர் தமிழில் வழங்கும் பல சொற்களைத் தங்கள் மொழியில் முதல்முதல் இருந்ததாக மற்றவர் நினைக்கும்படி காலா காலங்களில் மாற்றிமாற்றியதற் கிணங்க நூல்களும் புராணங்களும் கட்டுக் கதைகளும் செய்து பரப்பி வந்தார்கள்" என்று ஆபிரகாம் பண்டிதர் (பக். 42கருணாமிர்த சாகரம்) கூறியிருக்கின்றார்.

     8.7 பிரித்தானியக் கலைக் களஞ்சியம் (மடலம்9,பக்.438) "சமற்கிருதத்தில் கலந்துள்ள மூலச்சொற்களாக  அக்கா அத்தைஅப்பாஊர்புலி முதலியவற்றைக் குறிப்பிடுகின்றது.

     8.8 மொழிஞாயிறு பாவாணரும்பாவலரேறு பெருஞ்சித்திரனாரும் இன்னும் தமிழ் மீட்சிக்கெனப் பாடாற்றி வரும் பலரும் பிறமொழிக் கலப்பின்றிப் பல நூல்கள் எழுதியுள்ளனர். தமிழ்நாட்டி லிருந்தும் புதுச்சேரியி லிருந்தும் தனித்
தமிழ் இதழ்கள் வெளிவருகின்றன. அவற்றில் காணப்படும் சொல் 
எதையேனும் வடசொல் என்று மொழியறிஞர் முன்னிலையில் மெய்ப்பித்துக் காட்டத்  'தூயதமிழும் சமற்கிருதச் சொற்கள் கலந்த கலவை'  எனக் கூறியவர் அறிவு நேர்மையோடும் நாணயத்தோடும் முன்வருதல் வேண்டும்இல்லையேல், உணமைக்கு மாறாக எழுதியதற்காக வருந்தித் திருந்த வேண்டும்.

     9.1 தொல்காப்பியம், பாணினியின் வடமொழி இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப் பட்டதாகவும் அம்மடல்களில் கூறப் பட்டிருந்தது. 
     இதனைப் பற்றிய அறிஞர் கருத்துரைகளை அறிந்தால் உண்மை விளங்கும். "சுப்பிரமணிய தீட்சிதர்,  அகத்தியத்திற்கும்  தொல்காப்பியத்திற்கும் முதனூல்
பாணினி இயற்றிய அஷ்டாத்யாயியும் இந்திரன் ஆக்கிய இலக்கணமும்  என்று கொண்டார். சென்ற நூற்றாண்டில் கால்டுவெல்லும் இன்றைய நூற்றாண்டில்பர்ரோஎமனோசுநீத் குமார் சட்டர்சி முதலான பல்வேறு  ஆரிய திராவிட மொழியாய்வாளரும் இக்கூற்று முற்றிலும் தவறானது 
எனபதைத் தெள்ளிதின் நிலைநாட்டி விட்டதை அறிவீர்கள்.     சொல்லப் போனால்இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு இக்கருத்தை சிவஞான முனிவர் தெளிவாக்கி விட்டார்" என்று பெ.திருஞானசம்பந்தன் (பக்,63சமற்கிருத ஆதிக்கம்) எடுத்துரைக்கின்றார்.
     மேலும்,  தமிழின் தனித்த இலக்கணச்சிறப்புகளைத் "தமிழ்மொழியின் வரலாறு"  என்ற நூலில் (பக்.33,34,35)  பரிதிமாற்கலைஞர்  தெளிவாக விளக்குகின்றார்.

     9.2 சி.ஆர்.சங்கரன் என்னும் பூனே ஆய்வுக்கூடத்தைச் சேர்ந்த மொழிவல்லார், "தொல்காப்பியரின் கொள்கைகளைப் பார்க்கும் போது வடமொழி இலக்கண ஆசிரியரான பாணினி மிகவும் பின்தங்கி விடுகிறார்" என்று கூறியுள்ளார் 
(முனைவர் சேலம் ஜெயலட்சுமிபக்.133சமற்கிருத ஆதிக்கம்)

     10.1 சென்னையைச் சேர்ந்த ஒரு பெரிய படிப்பாளர், 'auto rickshaw' என்னும் தானியங்கி யிழுவை - 'தானி' -யில் சென்றபோது அந்தத் தானி ஓட்டுநர், 'தற்செயலாகஎன்ற பொருளில் 'அகஸ்மாத்து என்னும் வடசொல்லைப் பயன்படுத்தியதைக் கேட்டதும், 'சமற்கிருதம் பொதுமக்கள் மொழியில் எவ்வளவு 
ஊடுருவி இருக்கிறதுஎன்று வியந்து போனாராம்!
அவர் ஏறிச்சென்ற ஊர்தியின் பெயரான 'RICKSHAW' என்ற ஆங்கிலச்சொல், 'RIKI - SHA' என்னும் சப்பானிய மொழிச் சொல்லினின்றும் பெறப்பட்டது என்கின்ற உண்மை அவருக்குத் தெரிந்திராமல் இருக்கலாம். அப்பெயரைக் கேட்கும் சப்பானியர் ஒருவர், 'சப்பானிய மொழி தமிழகப் பொதுமக்களிடம் 
எவ்வளவு ஊடுருவி இருக்கிறதுஎன்றவாறு வியப்படைகின்ற நிலையை ஒத்ததே அம்மடலை எழுதியவர் 'அகஸ்மாத்தைக் கேட்டு வியப்படைந்த நிலைஅல்லவா

     11.1 நுண்கலைகள்இசைநாட்டியத்திற்குச் சொந்தமான மொழி சமற்கிருதமே என்றும் பல மடல்களில் எழுதுகின்றனர்.
     தொல்காப்பியத்தில், 'என்ப', 'மொழிப', 'என்மனார்போன்ற சொற்கள் 
இருநூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் காணப் படுகின்றன. மரபு என்னும் சொல் அறுபதிற்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளது. மரபியல் என்னும் ஓர் இயலே அந்நூலின் உறுப்பாக உள்ளது. இவற்றிலிருந்துச் சில செய்திகள் நமக்குத் தெளிவாகின்றன.
தொல்காப்பியம் இயற்றப்பட்ட காலத்திற்கும் முன்பாகவே பல இலக்கண  நூல்கள் இருந்திருக்க வேண்டும்;  அதற்கும் முன்பாகவே பல உயர்ந்த இலக்கியங்கள்,  இசை நூல்கள்கலை நூல்கள் இருந்திருக்க வேண்டும் என்பனவே அவை.
     "சமயம்நுண்கலைகள்தொழில்கள்மருத்துவம்இலக்கியம் போன்றவை பெரிதும் திராவிட மூலத்தனஅடிப்படையி. அவை சமற்கிருத மொழியில் விளக்கப் பட்டுள்ளனபெயர்த்தெழுதப் பட்டுள்ளனபாதுகாக்கப் பட்டுள்ளன. அவற்றாலேயே அவை திராவிடர்களுடையன அல்ல என்றாகிவிடா! பரத முனிவரின் 'நாட்டிய சரித்திரம்'  முதல் தீபாவளித் திருநாள்’ வரை எந்த ஒரு விளைவிற்கும் மூலத் திராவிடத் தொடர்பும் தமிழ் அடிப்படையும் இருந்தும் அவை வடமொழி மேற்பூச்சினை அல்லது 'வண்ண'த்தைக் காட்டுகின்றன” என்று  அறிஞர்  தமிழண்ணல் விளக்கிச் சொல்கிறார் (பக்.38,சமற்கிருத 
ஆதிக்கம்). 

     11.2 1948இல் சி.ஆர்.சீனுவாச ஐயங்கார் எழுதி வெளிவந்த "Indian Dance" என்ற நூலில் பக்கம்  27இல்,  "இசைநாட்டியம் முதலிய கலைகளை யெல்லாம் தமிழ் நூல்களிலிருந்துதான் வடமொழிக்குக் களவாடிச் சென்றனர் என்று மறைந்த என் நண்பர் ஆபிரகாம் பண்டிதர் கூறுவதுண்டு. அது உண்மை தானோ என 
இன்று யானே கருதவேண்டியுள்ளது. ஏனெனில்இப்பொழது நாட்டியத்தில் கையாளப்படும் பல சொற்கள் ஆரியச்சொற்கள் அல்ல. அவற்றின் மூலம் ஐயத்திற் கிடமின்றித் திராவிடமே." - என்ற விளக்கம் உள்ளது.
     11.3 4500 ஆண்டுகட்கு முற்பட்ட சிந்துவெளி நாகரிக மக்கள் யாழ்முரசு போலும் இசைக் கருவிகளைப் பயன் படுத்தியதற்கான அடையாளங்களும் நாட்டியமாடும் பெண் உருவிலான படிமைகளும் அகழ்வாராய்வில் கிடைத்திருக்கின்றன என்று பிரித்தானியக் கலைக் களஞ்சியம் 15ஆம் பதிப்பு மடலம்17பக்கம் 151இல் கூறப் பட்டுள்ளது.

     11.4 "தமிழரின் ஆடற்கலையை  இசைவேள மரபினர் தொடர்ந்து பயின்று வந்தனர். அதைத் 'தாசியாட்டம்என்று நாடு இழிவுபடுத்தி வந்தது. இந்த நூற்றாண்டில் 1930ஆம் ஆண்டுவாக்கில்தான் அதற்குப் 'பரத நாட்டியம்என்று புதுப்பெயர் சூட்டிச் சமற்கிருத மயமாக்கி அதையும் ஆரியம் அபகரித்துக் 
கொண்டது. அது காசுமீரத்திலிருந்து வந்த கலை என்றுகூடக் கூறத் 
துணிந்தது"  என்று அறிஞர் .தண்டபாணி (பக்,128சமற்கிருத ஆதிக்கம்) நெஞ்சம் குமைகிறார்.

     11.5 சமற்கிருத மேலாண்மையை நிலைநாட்டும் பொருட்டு,                      அந்த ஆங்கில நாளேட்டில் எழுதப் பட்டுவரும் மடல்களிலுள்ள பொய்மையைத் தோலுரித்துக்காட்டி உண்மையை உணர்த்தப் பல்வேறு அறிஞர்களின் ஆய்வுக்கருத்துக்கள் எடுத்துக் காட்டப் பட்டுள்ளன.
     தமிழ் இளைஞரும் இளைஞையரும் பன்முக அறிவு நிலைகளிலும் தங்களை வளர்த்துக் கொண்டு, தமிழ்மொழி, நாகரிகம்பண்பாட்டு மீட்சி முயற்சிகளில் ஈடுபட வேண்டும். இன்றேல்எல்லா வாய்ப்பு வசதிகளோடும் வலம் வந்து கொண்டிருக்கும் பொய்ம்மையின் வல்லாளுமைஉண்மையை நம் கண் முன்னராகவே ஆழக் குழிதோண்டிப் புதைத்துவிடக் கூடும்!             

---------------------------------------------------------------------