விழுப்புரத்தில்
முத்துக்குமாருக்கு வீரவணக்கப் பொதுக்கூட்டம் 30-01-2010
காரி(சனி)க்கிழமை மாலை 06-30 மணிக்குத்
தொடங்கி நடைபெற்றது.
விழுப்புரம்
அஞ்சலகத்திற்கு அருகில் பெரியார் சிலைப் பக்கத்தில் கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம்
தமிழிளைஞர் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற இக் கூட்டத்திற்கு திரு. சோதி
நரசிம்மன் தலைமை ஏற்றார்.
*
தொடக்கத்தில், வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கும், ஈழமக்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வற்புறுத்தித்
தீக்குளித்து உயிர்நீத்த மற்ற ஈகிகளுக்கும் ஈகச்சுடர் ஏற்றிப் பெண்கள் வீரவணக்கம்
செலுத்தினர். தொடர்ந்து பலரும் மெழுகுத்திரி ஏற்றி வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.
*
அதன்பின், சோதிநரசிம்மனும் இன்னொரு தோழரும் உரையாடல் வழியாகத் தமிழ்
மொழி அழிப்பு, தமிழர் நிலம் பறிப்பு
ஈழத்தமிழர் படுகொலைகள், தமிழக மீனவர்
சிங்களக் கடற்படையிரால் தாக்கப்பட்டுக் கொல்லப்படுதல் ஆகியவற்றை விளக்கினர். இடையிடையே
இசைக்குழுவினர் விளக்கம் தரும் பாடல்களைப் பாடினர்.
*
சொற்பொழிவாளர்கள்
எழில். இளங்கோவும் திருச்சி வேலுச்சாமியும் ஈழத்தமிழருக்குத் துணையிருக்க
வேண்டுமெனவும் இந்திய அரசும் தமிழக அரசும் ஈழத்தமிழருக்கு எதிரான போக்கைக் கைவிட
வேண்டுமெனவும் விளக்கிப் பேசினர்.
*
பெருந்திரளான
மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இரவு பத்துமணி அளவில் திரு. கொ.ப.சிவராமன் நன்றியுரையுடன்
கூட்டம் முடிவுற்றது.
------------------------------------------------------------------------------------------------------------
*