முதுமுனைவர்
இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்! – அ.
-----------------------------------------------------------------------------------
தமிழா,
உன் தாய்மொழியிலுள்ள இசைப்பாக்கள் எவைஎவை எனத் தெரியுமா?
பெருந்தேவபாணி, தேவபாணி, தேவாரம், திருவாசகம்,
திருவிசைப்பா, பாவைப்பா, பள்ளி எழுச்சி, வரிப்பா வகை, வண்ணவகை, சிந்துப்பா-
இவ்வளவு மட்டுமா?
உன் இசையெல்லாம் ஒருங்குசேர்த்தாலும் ஒரு பகுதிதானும்
ஒட்டாத நால்வகைப்பா:
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா மட்டுமா?
தாலாட்டு, கும்மி, ஒயில், ஒப்பாரி என எத்தனை எத்தனை வகை!
இதனை இசை இல்லையென்று இதனைமறைக்க, ஒழிக்க எவரோ
இட்டுக்கட்டிச் சொன்னால் நீ ஒப்புவது,,,,
உன்னினத்தையே பெற்ற இசைத்தாயை மலடி என்று பழிப்பது
போலல்லவா?
------------------------------------------------------------------------------------------------------------