முதுமுனைவர் இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்!– ௯.
-----------------------------------------------------------------------------------------------------------
தமிழா,
இதோ பார்,
தியாகராசர் பாடினார்,
தெலுங்கிசை; தெலுங்கு அவர் தாய்மொழி.
வடமொழியில் பாடியவர்,
சியாமா சாத்திரி – அவர் தாய்மொழி அது.
நீ உன் தாய்மொழியில்
பாடுவாயா?
உனக்குத் தாயே இல்லை,
தாய் மொழியே இல்லை,
தாய்மொழியில் இசையே இல்லை
எல்லாமும் இல்லை என எவர்
சொன்னாலும் நீ என்ன செய்ய வேண்டும்?
‘என்னிசையைக்
கேள்’
என்றல்லவா சொல்லிக் கிளர்ந்திருக்க வேண்டும்?
இசை என்ற சொல் புதுவதா?
முத்தமிழே இயல், இசை,
கூத்து அல்லவா!
முத்தமிழ் என்ற பாடப்
பிரிவிலேயே இல்லை என்னும் முழு மறைப்பாளனை மூடமாக ஒப்புக்கொள்கிறாநா?
மேடையிலேயே தமிழிசை,
தமிழ்க்கூத்து இல்லாமல் ஆக்கினாயே;
இது, கோடி கோடி எனச்செல்வம்
உடையானைத் தெருக்கோடிப் பிச்சைக்காரன்
என்பது போலில்லையா?
----------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக