உலகத் தாய்மொழி நாளும் தமிழரும்!
------------------------------------------
இன்று (21-02-2017) உலகத் தாய்மொழிநாள்!
உலகெங்கிலும் உள்ள மக்கள் தம் தாய்மொழியைக் கொண்டாடி
மகிழ்கின்றனர்!
இந்தத் தாய்மொழிநாளில்....
தமிழகத்தில் உள்ள தமிழர்களின் நிலை...
இரங்கத்தக்கது மட்டுமன்று!
இத் தமிழர்கள் தங்கள் அடையாளத்தையே இழந்து-
தம் மொழி நாகரிக பண்பாட்டுச சிறப்புகளை இழக்கிறார்கள்!
தமிழர்களின் சில குடும்பங்களில் தமிழே தெரியாத தலைமுறை
தலையெடுத்திருக்கிறது!
இக் குடும்பங்களின் எண்ணிக்கை வரவரக் கூடிக்கொண்டே போகிறது!
ஒருமொழிவைத்து உலகாண்ட இனம், உருத்தெரியாமல்
கரைந்துகொண்டிருக்கிறது!
உலகத்தில் முதல் தாய்மொழியைக் கண்ட இனம், சோற்றுக்கும்
துய்ப்புக்கும் தாய்மொழியை விற்றுத் தொலைக்க முனைகிறது!
உலக நாகரிகத்தின் தொட்டிலான தமிழ்மண் உருவழிக்கப்பட்டு
ஒழிக்கப்படுகின்றது!
போலித் துய்ப்புகளுக்கும் பொய் நாகரிகத்திற்கும் இத் தமிழ்நிலம்
இரையாகின்றது!
இந்த உலகத் தாய்மொழிநாளில்
தமிழ் தமிழர் நலன் குறித்துக் கவலைப்படுவோர்
எண்ணிப்பார்க்க வேண்டும்!
இளைஞர்கள் செயற்படவேண்டும்!
இந்த இழிநிலைகளை மாற்ற வேண்டும்!
நாம் உலகத் தாய்மொழிநாளில் பெருமைப்படவும் கொண்டாடவும்
வேறொன்றுமில்லை!
--------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக