வித்தியதும் ஆகாதே வீண்!
=========================
வரலாறு காணாத…
ஒப்புயர்வற்ற…
ஒருதனிச் சிறப்பார்ந்த…
அறிக்கை வெளியிட்டு உணர்வு கொளுத்திய…
ஈடற்ற ஈகி…
முத்துக்குமார் நினைவைப்போற்றுவம்!
கடமை உணர்வோம்!
====================================
வித்தியதும்
ஆகாதே வீண்!
======================================
(வெள்ளொத் தாழிசை)
இறப்பில் எழுச்சிதந்த எங்கள் குமரா!
மறத்திற்கே
நல்லுருநீ; மாத்தமிழர் மானத்
திறத்தை
விளக்கும் திரு.
தன்னேரில்
ஆவணத்தால் தந்தவுயி ரீகத்தால்
தன்னலத்தார்
அஞ்ச தமிழிளைஞர் ஏழ்ச்சிகொள
நன்முத்தே
இட்டாயே வித்து.
முத்துக்
குமாரேயெம் மூத்த பெருமுரசே
செத்தெழுச்சி
தந்ததனிச் சீரா! திருவிளக்கே!
வித்தியதும்
ஆகாதே வீண்.
====================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக