நம் மூச்சு, நோக்கம், கொள்கை, முயற்சி!
தனித்தமிழ் அறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனார், தூயதமிழ்
இலக்கியத் திங்களிதழாகிய ‘தென்மொழி’ இதழின் நிறுவுநர்;
ஆசிரியர் ஆவார்.
பாவலரேறுவின் ‘தென்மொழி’ தமிழ்
காக்கும் கேடயமாகவும், தமிழ்ப் பகைவர் அஞ்சும் படைக்கலனாகவும் திகழ்ந்தது.
அவ்விதழின் ஆசிரியவுரை (தலையங்கம்) பெரும்பாலும் முதல்
பக்கத்தில் இடம் பெறும். ஆசிரியவுரைக்கும் முன்னால் மேல் முகப்புப் பகுதியில்
கீழ்க்காணும் பாடல் ஒவ்வொரு இதழிலும் இடம்பெறும்.
“கெஞ்சுவதில்லை பிறர்பால்! அவர்செய்
கேட்டினுக்கும்
அஞ்சுவதில்லை; மொழியையும் நாட்டையும் ஆளாமல்
துஞ்சுவதில்லை” எனவே தமிழர்
தோளெழுந்தால்
எஞ்சுவதில்லை உலகில் எவரும் எதிர்நின்றே!
‘தென்மொழி’ சுவடி: 12; ஓலை:
1., தி.பி.2005, துலை (ஐப்பசி) – (அக்.-நவ.-1974) இதழ் முதல் ஒவ்வொரு
மாத இதழிலும் மேற்குறித்த பாடலின் கீழ், ஆசிரியவுரைக்கும் முன்னர் கீழ்க்காணும்
செய்தி ஒரு நீள் சதுரக் கட்டத்திற்குள் தவறாது இடம் பெற்றது. அவருக்குப் பின்னரும்
இப்பொழுதும் இடம் பெற்று வருகிறது.
நம்
மூச்சு, நோக்கம், கொள்கை, முயற்சி!
இந்தியா ஒன்றாக இருக்கும்வரை இந்து மதம் இருக்கும். இந்து
மதம் இருக்கும் வரை தமிழர்களும் இந்துவாகவே இருக்க வேண்டும். தமிழர்கள் இந்துவாக
இருக்கும் வரை மதப் பூசல்களும் குலக் கொடுமைகளும் அவர்களைவிட்டு விலகவே முடியாது. மதப்
பூசல்களும் குலக் கொடுமைகளும் அவர்களைவிட்டு விலகாதவரை, ஆரியப்பார்ப்பனரின்
வஞ்சகத்திலிருந்தும் மேலாளுமையினின்றும் தமிழன் மீளவே முடியாது.. அத்தகைய
பார்ப்பனீயப் பிடிப்புகளிலிருந்து தமிழன் மீளாதவரை, தமிழ்மொழி தூய்மையுறாது;
தமிழினம் தலை தூக்காது; தமிழ்நாடு தன்னிறைவு அடைய முடியாது. எனவே, இந்து மதத்தினின்றும்,
மதப் பூசல்களினின்றும், ஆரியப் பார்ப்பனீயத்தினின்றும் விடுபட வேண்டுமானால், நாம்
இந்திய அரசியல் பிடிப்பினின்றும் விடுபட்டேயாகல் வேண்டும். ஆகவே, தமிழக விடுதலைதான்
நம் முழுமூச்சு, நோக்கம், கொள்கை, முயற்சி என்று தமிழர் ஒவ்வொருவரும் உணர்தல்
வேண்டும்.
************************************************************************ .
"தமிழர் தோளெழுந்தால் எஞ்சுவதில்லை
பதிலளிநீக்குஉலகில் எவரும் எதிர்நின்றே!" என்பதை
வரவேற்கிறேன்.
உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!
https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html